which island has the most cats in tamil
பெரும்பாலும் பூனைகளை யாரும் விரும்பமாட்டர்கள். ஆனால் ஒரு சிலருக்கு பிடித்த விலங்காக பூனை உள்ளது. அதனால் வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றன. ஜப்பானியர்கள் பூனைகள் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பார்கள். பூனை ஒரு பாலூட்டி சேர்ந்த ஒரு ஊனுண்ணி விலங்குகள் ஆகும். இந்த பூனைகள் குறைந்த மக்கள் தொகை உள்ள இடத்தில் காணப்படும். அதனால் இன்றைய பதிவில் பூனைகள் எந்த தீவில் அதிகம் உள்ளது என்பதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
பூனைகள் எந்த தீவில் அதிகம் உள்ளது:
பூனைகளை ஜப்பான் நாடுகளில் தான் அதிகம் வளர்த்து வருகின்றன. இங்கு மனிதர்களை விட அதிகம் பூனைகள் தான் வசித்து வருகின்றன. அதிலும் பசிபிக்கடலில் தெற்கு ஜப்பானை ஒட்டி 12 -க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றை பூனை தீவுகள் என அழைக்கப்படுகிறார்கள். பூனைகள் அதிகம் உள்ள தீவுகளாக ஓஷிமா மற்றும் டாஸிரொஜிமா இந்த இரண்டு தீவுகளில் தான் பூனைகள் அதிகம் வசித்து வருகிறது.
டாஸிரொஜிமா தீவு மற்றும் ஓஷிமா தீவுகளில் பூனைகள் இருக்க காரணம் :
டாஸிரொஜிமா தீவு :
ஒரு காலத்தில் டாஸிரொஜிமா தீவுகளில் பட்டு உற்பத்தி நன்றாக நடைபெற்றது. பட்டு உற்பத்தியை எலிகள் சேதப்படுத்தி வருவதனால் அதனை அழிப்பதற்காக பூனைகளை அதிகம் வளர்த்தனர். ஆனால் நாளடைவில் பட்டு தொழில் தயாரிப்பு நின்று போவதனால் அங்கு உள்ள மக்கள் ஜப்பான் நகரங்களுக்கு சென்று விட்டார்கள்.
ஓஷிமா தீவு:
ஓஷிமா தீவுகளில் 22 பேர் மனிதர்கள் மட்டும் வசித்து வருகிறார்கள். அதில் பூனைகளின் எண்ணிக்கையாக 120 உள்ளது. மீனவர்களின் படகுகளை எலி சேதப்படுத்துவதால் அவற்றை தடுக்கும் நோக்கத்துடன் பூனையை ஓஷிமா தீவுகளில் வளர்த்து வந்தனர். இப்போது தொழில் செய்யும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதனால் மக்கள் ஓஷிமா தீவுகளை விட்டு வெளியேறி விட்டார்கள். அதனால் இன்றைய நிலையாக ஓஷிமா தீவில் ஒரு நபருக்கு 6 என்ற விதத்தில் காணப்படுகின்றன.
நம் இந்திய நாட்டில் பூனை குறுக்கே சென்றால் தடையாக நினைத்து விலகி செல்வது வழக்கம். ஆனால் ஓஷிமா தீவுகளில் பூனை குறுக்கே சென்றால் பணம் பெருகும் என்று நினைப்பார்கள். ஓஷிமா தீவுகளில் பூனை கென்று ஒரு கோவில் உள்ளது. ஏனெனில் ஒரு பூனையின் மீது பாறை விழுந்து இறந்து விட்டது, அதன் நினைவாக கோவிலை கட்டி விட்டார்கள். இதனை சுற்றுலா பயணிகள் இதனை ஆச்சரியத்தை தூண்டும் வகையில் உள்ளது.
பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |