ஐஸ்கிரீமை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா..?

Advertisement

 Which Person Invented Ice Cream in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் பிடித்த ஐஸ்கிரீமை கண்டுபிடித்தவர் யார் என்பதைத் தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நாம் ஒவ்வொரு முறையும் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது இது இவ்வளவு டேஸ்டாக இருக்கிறதே இதனை யார் கண்டுபிடித்திருப்பார்கள் என்று யோசித்து இருப்போம். அப்படி யோசித்து இருக்கும் நண்பர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஐஸ்கிரீமிற்கு ஏராளமான வரலாறு இருக்கிறது என்று கூறுகிறார்கள். பலபேர் இதனை நான் கண்டுபிடித்தேன் நான் தான் கண்டுபிடித்தேன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதனை உண்மையில் யார்தான் கண்டுபிடித்தது.

கணிதம் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

Who Was The First Person To Make Ice Cream in Tamil:

 what country invented ice cream in tamil

 ஐஸ்கிரீமிற்கு இருக்கும் வரலாறு மிகப்பெரியது. இதனை கண்டுபிடித்தது யார் என்பது இன்றுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஒரு சில சான்றுகளின் அடிப்படையில் இதனை கீழே குறிப்பிட்டு உள்ள நபர்கள் கண்டுபிடித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கி.பி 618-907 ஆண்டுகளில் சீனாவை சேர்ந்த ஷாங்கின் மன்னன் டாங் என்பவர் ஐஸ்கிரீமை கண்டுபிடித்தார் என்று கூறுகிறார்கள். இவர் 94 ஐஸ்கிரீம்களை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, ஐஸ்கிரீமை எருமை மாட்டு பால், ஆட்டு பால், தயிர், மாவு மற்றும் கற்பூரம் ஆகியவை கலந்து செய்யப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஒரு முறை பாலுடன் அரிசி மாவை கலந்து உறையவைக்கும் போது ஐஸ்கிரீமை கண்டுப்பிடித்து இருக்கிறார்களாம். 

 who originally made ice cream in tamil

இதேபோல் இன்னொரு வரலாற்றில், அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் கிங் என்பவர் 1874 ஆம் ஆண்டில் இதனை கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இது கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கண்டுபிடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாவீரர், அலெக்ஸாண்டர் அவர்கள் ஐஸ்கட்டிகளுடன் தேன் மற்றும் பழச்சாறு கலந்து பருகி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் பல வரலாறுகள் உள்ளது.

எனவே, ஐஸ்கிரீம் எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது மர்மமான புதிராகவே இருக்கிறது. இருப்பினும், ஒரு சில ஆதாரங்களை வைத்து மேலே கூறியுள்ளவர்கள் கண்டுபிடித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. 

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement