அதிக நடைமேடை கொண்ட ரயில் நிலையம்
வணக்கம் பிரண்ட்ஸ்..! வாசகர்கள் அனைவரும் எங்கள் Pothunalam.Com பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி இருந்தாலும் இன்னொரு முறை கேட்கிறேன். உலகில் அதிக நடைமேடை கொண்ட ரயில் நிலையம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
உலகில் அதிக நடைமேடை கொண்ட ரயில் நிலையங்கள் எது..?
பொதுவாக நம் அனைவருக்குமே ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தை தான் பலரும் விரும்புகிறார்கள். காரணம் ரயில் பயணத்தில் பல வசதிகள் இருக்கும். கூட்டநெரிசல் இருக்காது. குலுங்கி குலுங்கி செல்லாது. எனவே ரயில் பயணம் என்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
சரி நாம் ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு பிளாட்பாரத்தில் இருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு செல்ல நடைமேடைகள் வழியாக தான் செல்வோம். சில ஊர்களின் ரயில் நிலையத்தில் 2 அல்லது 5 நடைமேடைகளை பார்த்திருப்போம்.
ஆனால் 23 நடைமேடைகளை கொண்ட ரயில் நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
ரயில் நிலையம் ஒன்று, மாநிலங்கள் இரண்டு.. இந்த வினோதமான ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா.. |
பொதுவாக நம் நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் ஒரு நாளுக்கு சுமார் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதுபோல ரயில்களை இயக்க அதற்கான ரயில் பாதையும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் நிலையங்களில் ரயில்கள் வந்து நிற்பதற்காக நடைமேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஹவுரா ரயில் நிலையம்:
கொல்கத்தாவில் உள்ள ஹவுரா என்ற ரயில் நிலையத்தில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல நாடுகளின் பல்வேறு ஊர்களுக்கு இங்கு இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஹவுரா ரயில் நிலையத்தில் மட்டும் 23 ரயில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 26 ரயில் பாதைகள் இங்கு இருந்து இயக்கப்படுகிறன. அந்த அளவிற்கு ஒரு பெரிய ரயில் சேவை கட்டமைப்பை இந்த ஹவுரா ரயில் நிலையம் பெற்றுள்ளது.
1 முஸ்லீம் கூட இல்லாத நாடா.. அது எங்க இருக்குனு தெரியுமா |
சீல்டா ரயில் நிலையம்:
அதுபோல கொல்கத்தாவில் உள்ள மற்றொரு பேமஸான ரயில் நிலையம் என்றால் அது சீல்டா ரயில் நிலையம் தான். இந்த சீல்டா ரயில் நிலையத்தில் மொத்தம் 20 ரயில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ரயில் பாதைகள் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்:
மேலும் நம் நாட்டின் பொருளாதார தலைநகரமாக இருக்கும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான் அதிக நடைமேடைகளை கொண்ட ரயில் நிலையங்களில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 18 ரயில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து 16 ரயில் நடைமேடைகளை கொண்ட புதிய டெல்லி ரயில் நிலையமும் 4 ஆவது இடத்திலும், 15 ரயில் நடைமேடைகளை கொண்ட சென்னை சென்டரல் ரயில் நிலையம் 5 ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |