இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார் தெரியுமா..?

இந்திய ரூபாய் சின்னம்

நண்பர்களே வணக்கம் தினம் தோறும் நாம் ஒவ்வொரு விதமான தகவல்களை பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். அதேபோல் நமக்கு தெரியாத பலவும் உள்ளது. அது அனைத்தையும்  உங்களுக்காக தினம் தோறும் பதிவிட்டுக்கொண்டுதான் வருகிறது அந்த வகையில் இன்று இந்திய ரூபாயின் சின்னத்தை உருவாக்கியவர் யார் என்று தெரிந்துகொள்ள போகிறோம். அதே போல் முந்தய பதிவில் ரூபாய் நோட்டில் உள்ள கோடுகளுக்கு என்ன அர்த்தம் என்று பார்த்திருப்போம். அப்படி தெரியாமல் இருப்பவர்கள் இதை கிளிக் செய்து அதற்கு இதுதான் காரணம் தெரிந்துகொள்ளவும்.

இதையும் தெரியுந்துகொள்ளவும் ⇒ இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இந்திய ரூபாய் சின்னம் உருவாக்கியவர் யார்?

இந்திய ரூபாய் சின்னம் உருவாக்கியவர் யார்

இந்திய ரூபாயின் சின்னத்தை உருவாக்கியவர் மும்பையில் ஐஐடியில் படித்த உதயகுமார் என்ற தமிழர் ஆவார். இவரின் தந்தை தி.மு. காவை சேர்த்த முன்னாள் எம்.எல்.ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார். உதயகுமாரின் தாய் ஜெயலட்சுமி ஆவார். இவர்கள் தண்டையார்பேட்டையில் வசித்துவருகிறர்கள். இவரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலூர் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.

உதயகுமாருக்கு இளம் வயதிலிருந்து ஓவியத்தின் மீது தீராத ஆசை இருந்தது. அவரின் ஆசையில் சிறு சிறு படியாக தனக்கு தானே அவரை மேம்படுத்திக்கொண்டு வந்தார் அவர். ஓவியம் வரைந்து நிறைய பரிசு பொருட்களை வாங்கியுள்ளார்.

உதயகுமார் அவரின் பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜூனியர் கல்லூரியில் 12 வகுப்பு வரை படித்தார் பின்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் படித்து பட்டம் பெற்றார். அந்த படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

அவரின் கல்லூரி படிப்பை முடித்த பின் மும்மையில் ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார்.

பின்பு அவர் 2010 ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வடிமைத்த அடையாள குறியீடை அனுப்பிவைத்தார். அதிக போட்டிகளுக்கு மத்தியில் உதயகுமாரின் குறியீட்டு தேர்வாகி உள்ளது. பின்பு மத்திய அரசு அதிகாரபூர்வமாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil