ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்?

Who Designed the Olympic Flag

Who Designed the Olympic Flag?

பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள வந்தமைக்கு நன்றி.. இன்றைய பதிவில் ஒலிம்பிக் கோடியை கொடியை பற்றியும், இந்த ஒலிம்பிக் கொடியை யார் வடிவமைத்தார் மற்றும் அவரை பற்றிய சில தகவல்களை நாம் படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொள்வதனால் நீங்கள் ஏதாவது பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்?

விடை: பியரி டெ கூபர்டின் (Pierre De Coubertin)

ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?

வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி அமைந்திருக்கும்.

நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படும் பியரி டெ கூபர்டின் (Pierre De Coubertin) 1913-ம் ஆண்டு இந்த கொடியை வடிவமைத்தார்.

வளையங்கள் ஒவ்வொன்றும் போட்டியிடும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களை பிரதிபலிக்கின்றன.

ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்களின் நிறங்கள்:

இந்த வளையங்கள் சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும்.

கொடியின் வெள்ளை நிறத்தையும் சேர்த்து இந்த 6 நிறங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியிலும் இடம் பெற்றிருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டன.

1920-ம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நடந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil