Who Discovered Oxygen
நாம் வாழும் பூமியானது நிலம், நீர், காற்று, வானம் மற்றும் நெருப்பு ஆகிய அனைத்தும் சூழ்ந்த ஒன்றாக தான் இருக்கிறது. இந்த பஞ்ச பூதங்களில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால் நம்மால் ஆரோக்கிமாகவும் மற்றும் உயிருடனும் வாழ முடியுமா என்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதுமட்டும் இல்லாமல் தண்ணீர் மற்றும் உணவு இல்லை என்றால் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது என்பது தான் உணர முடிந்த ஒரு உண்மை. இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் பள்ளி படிக்கும் காலம் முதல் ஒரு வார்த்தையினை அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அது என்னவென்றால் ஆக்சிஜன் தான். இத்தகைய ஆக்சிஜனை பற்றி நாம் பாடங்களில் படித்து இருப்போம். அதன் பிறகு அதிகமாக நாம் மருத்துவமனையில் பார்த்து இருக்கும். இவ்வளவு முக்கியமான ஆக்சிஜனை கண்டுப்பிடித்தவர் யார் என்றால் அது நமக்கு தெரியாது. ஆகையால் இன்றைய பதிவில் ஆக்சிஜனை கண்டுபிடித்தது யார் என்றும் அவரின் சிறப்பு என்னவென்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா..
ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் யார்..?
ஆக்சிஜன் என்பது நாம் அனைவரும் படித்த ஒன்றாக இருந்தாலும் கூட அதனை கண்டுபிடித்தது யார் என்பதில் தான் நிறைய குழப்பங்கள் உள்ளது. ஆகையால் ஆக்சிஜனை முதலில் யார் கண்டுபிடித்தது மற்றும் அதன் பிறகு யார் கண்டுபிடித்தது என்றால்…
ஆக்சிஜனை முதன் முதலில் 1773-ஆம் ஆண்டு சுவிட்டனை சேர்ந்த கார்ல் வில்லெம் சீலெ என்பவர் தான் கண்டுபிடித்தார். இத்தகைய கண்டுபிடிப்பிற்கு பிறகு ஆய்வு செய்ததை வைத்து வலியும் ஆய்வும் என்ற கட்டுரையினையும் 1775-ஆம் ஆண்டு எழுதினார்.
ஆனால் இத்தகைய கட்டுரைக்கு முன்பாக 1774-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மதகுரு மற்றும் வேதியியலாளருமான ஜோசப் பிரீஸ்ட்லே என்பவர் ஆக்சிஜனை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அத்தகைய ஆக்சிஜனை டிப்லோஜிஸ்டிக்டட் ஏர் என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 1775-ஆம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி அன்டோயின் லாவோசியர் என்பவர் ஆக்சிஜன் ஒரு தனி உறுப்பு என்பதை கண்டறிந்தார். அதுமட்டும் இல்லாமல் அதற்கு ஆக்சிஜன் என்ற பெயரினையும் அவர் தான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
எனவே ஆக்சிஜனை கண்டுபிடித்தது மூன்று நபர்கள் ஒவ்வொரு முறையில் கூறினாலும் கூட இதனை கண்டுபிடித்தது ஜோசப் பிரீஸ்ட்லே என்று கூறப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றிய தகவல்:
- ஆக்சிஜனின் அடையாள எழுத்து O
- எலக்ட்ரான் கட்டமைப்பு 2s²2p⁴
- அணு எண் 8
- அணு நிறை 15.999 u
- எலக்ட்ரோநெக்டிவிட்டி 3.44
கணிதம் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |