ரேடியோ கண்டுபிடித்தவர் யார்? | Who Invented Radio in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் ரேடியோ கண்டுப்பிடித்தவர் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம். அன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் இந்த ரேடியோ (வானொலி) மட்டுமே இருந்துள்ளது. அவற்றில் தான் சில தகவல்களை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கேட்டு நாட்களை கழித்துள்ளார்கள். அன்றைய காலத்தில் அனைவரின் வீட்டிலும் ரேடியோ இருந்தது.
அந்த நிலை இப்போது மாறி தற்போது எல்லோர் வீட்டிலும் வானொலி இருக்கிறதா என்பது கேள்விக்குறியான விஷயம்தான். அன்றைய காலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அவர்களுடைய பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தி வந்தது ரேடியோவைத்தான். அந்த ரேடியோவை கண்டுப்பிடித்தது யார் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தொலைக்காட்சி கண்டுபிடித்தவர் யார்? |
வானொலியை கண்டுபிடித்தவர் யார்?:
விடை: குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) என்பவர் தான் ரேடியோவை முதன் முதலில் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பிறப்பு:
மார்கோனி ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி 1874-ம் ஆண்டு இத்தாலிய நாட்டில் பொலோனா நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை பெயர் கைசப் மார்கோனி, தாயார் ஆனி ஜேம்சன் என்பவர். தாயார் அயர்லாந்து நாட்டினை சேர்ந்தவர்.
கல்வி:
மார்கோனியின் தந்தை இத்தாலிய நாட்டின் ஒரு பெருமகன். அதனால் மார்க்கோனி என்பவர் இளம் வயதிலையே வசதியான வாழ்க்கையை வாழ்ந்தவர். இளமை பருவத்திலிருந்தே இவருக்கு கல்வியில் படிக்கும் திறன் அதிகமாக இருந்தது. வீட்டில் இருந்தபடியே இவருக்கு ஆசிரியர்கள் வந்து கல்வி கற்றுக்கொடுத்தார்கள். இவருக்கு அதிகமாக இயற்பியல் பாடத்தில் மின்சார இயலில் அதிகமாக ஆர்வம் இருந்தது.
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்? |
திருமணம்:
ஓபிரெயின் எனும் பெண்ணை 1905-ம் ஆண்டு மார்க்கோனி மணந்தார். இவர்களுக்கு மூன்று மகளும், ஒரு மகனும் பிறந்தார்கள். மூன்று மகள்களில் ஒரு மகள் சில வாரத்திலேயே இறந்துவிட்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் திருமணத்தில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
ஆய்வுகள்:
தன்னுடைய இல்லத்திலும் மார்க்கோனி தனி ஆய்வுகளை நடத்தி வந்தார். ‘எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்’ என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். பிறகு லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினை பற்றி விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் ‘வில்லியம் ஃப்ரீஸ்’ என்பவர் மார்கோனியின் ஆய்வுகளில் அதிகமாக ஆர்வத்தை காட்டி ஊக்கம் கொடுத்தார்.
நோபல் பரிசு:
மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு 1909-ஆம் ஆண்டில் கம்பியில்லா தந்தி முறையில் பல ஆய்வுகள் செய்திருந்த நிலையில் ‘கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்’ என்ற நோபல் பரிசு ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் வழங்கப்பட்டது.
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? |
மார்கோனியின் சிறப்புகள்:
- மார்க்கோனி மோட்டார் விபத்தில் 1912-ல் தன்னுடைய வலது கண்ணை இழந்துவிட்டார். அப்போதும் தன்னுடைய வானொலியின் ஆய்வுகளை நடத்தி வந்தார்.
- 1914-ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கப்பற்படைகளில் வானொலியைப் பயன்படுத்திப் பணி புரிந்தார்.
- அமெரிக்காவின் போர்க்குழு உறுப்பினராகத் தொண்டாற்றினார்.
- 1919-ல் போர் ஓலங்கள் குறைந்து அமைதி உருவானபோது, இவரின் பிறந்த நாட்டிற்காகப் ப்ல உடன்படிக்கைகளில் கையெழுத்துப் போடும் பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது.
- இத்ஹ்டாலிய ராயல் அகாதமியின் தலைவராக 1930-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார்.
மறைவு:
ஜூலை மாதம் 20-ஆம் தேதி 1937-ஆம் ஆண்டு மார்க்கோனி காலமாகி விட்டார். அவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |