ஒற்றை காலில் சாதனை படைத்த பெண்
நம் அனைவருக்குமே தன் வாழ்க்கையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் ஒரு சிலர் சாதனை படைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஆனால் சிலரோ வாழ்க்கை எப்படி போகிறதோ அதன் போக்கிலே செல்வோம் என்று இருக்கிறார்கள். ஆனால் மனிதனாக பிறந்த அனைவருமே தன் வாழ்க்கையில் ஏதாவது சாதித்தே ஆகவேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும். சரி இதெல்லாம் இருக்கட்டும். இப்போ எதற்கு இதை பற்றி பேசுகிறோம் என்று யோசிப்பீர்கள். அதுக்கு ஒரு காரணம் இருக்கிறது. சரி உங்களுக்கு ஒற்றை காலோடு சாதனை படைத்த பெண்ணை பற்றி தெரியுமா..? வாங்க தெரிந்து கொள்வோம்.
யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் தெரியுமா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஊனமுற்ற பெண் யார்..?
இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் கால் கைகள் நன்றாக இருந்தும் எந்த வேலைக்கும் செல்லாமல் மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கிறார்கள். ஆனால் ஊனமுற்ற பெண் ஒருவர் தன் ஒற்றைக்காலோடு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..?
அவர் தான் அருணிமா சின்ஹா. இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அருணிமா சின்ஹா பற்றிய கதை:
அருணிமா சின்ஹா உத்தரபிரதேசத்தில் லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரில் பிறந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவத்திலும், தாயார் சுகாதாரத் துறையில் கண்காணிப்பாளராகவும் இருந்து வந்தனர். அருணிமா சின்ஹாவிற்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் இருந்தனர். அவரது தந்தை இறந்த பிறகு, அவரது தாய் தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா
அருணிமா சின்ஹா கால்பந்து விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தேசிய கைப்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். மேலும் இவர் துணை ராணுவப் படையில் சேர விரும்பினார். அவர் CISF- ல் இருந்து அழைப்புக் கடிதம் ஒன்றைப் பெற்று, டெல்லிக்கு பயணம் செய்யும் போது, அவரது வாழ்க்கையை மாற்றும் விபத்தை எதிர்கொண்டார்.
அதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றபோது ரயில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்
இதனால் அவர் தண்டவாளத்தில் விழுந்தார். காலில் பலத்த காயங்கள் காரணமாக நகர முடியவில்லை. அதனால் எதிரே வந்த ஒரு ரயில் அவர் காலில் ஏறியது. இதன் காரணமாக ஒற்றை காலை இழந்தார்.
ஆனாலும் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த நிலையில் அருணிமா சின்ஹா ஒரு சபதம் எடுத்தார். அதாவது அவரது குறிக்கோள், செயற்கைக் காலுடன் நடப்பதில் திறமையானவராகவும், உலகின் மிக உயரமான இடமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்று சபதம் எடுத்தார்.
அந்த சபதத்தை 2013 ஆம் ஆண்டில் அவர் செய்து முடித்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையையும் பெற்றார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |