உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா…?

Advertisement

 World’s Biggest Banana in Tamil

இன்றைய பதிவில் மிகவும் சுவாரசியமான ஒரு தகவலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்ன சுவாரசியமான தகவல் என்றால் உலகிலேயே மிக பெரிய வாழைப்பழம் எங்கு விளைவிக்கப்படுகிறது என்பதை பற்றி தான். உலகிலேயே மிக பெரிய வாழைப்பழமா..? அது எங்கு விளைவிக்கபடுகிறது என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது.

ஆம் நண்பர்களே உலகிலேயே மிக பெரிய வாழைப்பழம் ஒன்று இருக்கிறது. அதனை பற்றிய முழுவிவரங்களையும் பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்=> உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Giant Highland Banana in Tamil:

Musa ingens banana fruit in tamil

பொதுவாக நாம் அனைவருக்கும் பிடித்த பழங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று ஆகும். இதற்கு முக்கிய காரணம் என்றால் இதில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

அதனால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்கின்றனர். அப்படி அனைவருக்கும் பிடித்த வாழைப்பழம் நீங்கள் இது வரை நீங்கள் பார்த்திடாத அளவில் 25 – 30 செ.மீ உயரத்தில் உள்ளது என்றால் நம்புவீர்களா..?

Biggest Banana Tree in Tamil:

Biggest banana tree in tamil

ஆம் நண்பர்களே உலகிலேயே மிக பெரிய வாழைப்பழம் பப்புவா நியூகினி என்ற நாட்டில் வளர்கிறது. இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை மரங்களின் பெயர் “Musa Ingens” ஆகும்.

இந்த மரம் நியூ கினியா தீவின் மலைக் காடுகளில் 1200-1800 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் மிகவும் அரிதான இனமாகும். இதன் தண்டு 2 மீட்டர் சுற்றளவு மற்றும் 15 மீட்டர் உயரம் வரை வளரும்.

இதன் இலை 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Musa Ingens வாழைமரம் பூத்த பிறகு தார்களை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்=> உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா

Musa Ingens Banana Fruit in Tamil:

Giant Highland Banana in Tamil

அப்படி உருவாகும் தார்களில் சில சமயங்களில் இந்த தார்களில் 300 வாழைப்பழங்கள் வரை காய்கின்றன. அவ்வாறு காய்க்கும் வாழைப்பழங்கள் 25 – 30 செ.மீ உயரத்தில் உள்ளது. இந்த தார்களின் எடை 60 கிலோ வரை இருக்கும்

இந்த வாழைமரங்களை பலர் வீட்டில் வளர்க்க முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அது பயனற்றதாய் சென்றுவிட்டதாம்… இதற்கு காரணம், இந்த மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளராது.

மேலும் இந்த மரங்கள் மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை இருந்தால் மட்டுமே வளரக்கூடியது.

அதனால் தான் இந்த வாழை மரங்கள் பப்புவா நியூகினி நாட்டில் மட்டும் அதிகமாக வளர்கிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

Advertisement