உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

Advertisement

Zero Gravity Place in World in Tamil 

நாம் வாழும் பூமியில் உள்ள புவியிருப்புவிசையின் உதவியினால் தான் நாம் நடக்கின்றோம். பூமியில் மட்டும் புவிஈர்ப்பு விசை இல்லையென்றால் நம்மால் நடக்க முடியாது நாம் அனைவரும் மிதக்கதான் வேண்டும். ஆனால் நமது புவியில் சில இடங்களில் புவிஈர்ப்பு விசை இல்லாத இடங்களும் உள்ளன.

அவ்வாறு புவிஈர்ப்பு விசை இல்லாத 6 இடங்கள் பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மற்றும் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா

Zero Gravity Place in Tamil:

ஹட்சன் பே: 

Zero Gravity Place in Tamil

கனடா நாட்டில் உள்ள ஹட்சன் பே என்னும் இடத்தில் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான ஈர்ப்பு விசை இருக்கிறது. இதற்கு காரணம் அங்குள்ள பனிக்கட்டிகள் உருகியதால் பூமியின் நிறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு ஈர்ப்பு விசை குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மிஸ்டரி ஸ்பாட், Santa CRUZ  (கலிபோர்னியா):

Place with least gravity on earth in tamil

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்த இடம் மிஸ்டரி ஸ்பாட் அதாவது மர்ம இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் 1939-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இடத்தில் ஏதோ ரகசியம் இருப்பதாக ஆய்வாளர்கள் உணர்ந்தனர். அதை ஆழமாக ஆராய்ந்த பிறகு தான் தெரிந்தது, ​​அங்கு 150 சதுர அடி பரப்பளவில் ஈர்ப்பு விசை செயல்படாது என்பது.

இங்குள்ள காந்தப்புலத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது மேல்நோக்கி நீர் பாய்கிறது. இந்த இடத்தில் நீங்களே கீழே விழ முயற்சித்தாலும் விழ முடியாது.

 வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்களா ஆச்சிரியமாக இருக்கே

செயின்ட் இக்னாஸ் மிஸ்டரி ஸ்பாட்:

Zero gravity on earth is at which place in tamil

அமெரிக்காவில் உள்ள செயின்ட் இக்னாஸ் மிஸ்டரி ஸ்பாட் (St. Ignas Mystery Spot) உள்ள இந்த இடம் மர்ம இடம் என்று அழைக்கப்படுகிறது. 1950-களில் சிலர் இந்த இடத்தை கணக்கெடுப்பு செய்தபோது, அவர்களின் சாதனைங்கள் தீடீரென்று வேலை செய்யாமல் நின்றுவிட்டன.

அதனால் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி விரிவான ஆய்வினை நடத்தியபோது, இங்குள்ள 300 சதுர அடி பரப்பளவில் ஈர்ப்பு விசை செயல்படாது என்பதை கண்டறிந்தனர்.

இங்கு புவிஈர்ப்பு விசை இல்லாததால் மக்கள் நாற்காலிகளை சுவரில் நிற்கவைப்பது மற்றும் அதில் உட்கார்ந்து மகிழ்வது போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.

உலகில் மிகப்பெரிய 10 நாடுகளின் பட்டியல் அது எந்தெந்த நாடுகள் தெரியுமா

காஸ்மோஸ் மிஸ்டரி: 

Places where gravity is different in tamil

அடுத்து அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவிலும் ‘காஸ்மோஸ் மிஸ்டரி ஸ்பாட்’ என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த உலகில் இருந்தும் வேறுபட்ட அல்லது விசித்திரமான பல விஷயங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக இந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் உங்களின் உடல் எடை குறைந்தது போல உணர்வீர்கள். மேலும் இந்த இடத்தில் நீங்கள் ஒரு காலில் கூட நிற்கலாம்.

ஸ்பூக் ஹில்(ஃப்ளோரிடா):

Places where gravity doesn't work on earth in tamil

ஃபிளோரிடாவில் உள்ள ஸ்பூக் ஹில் என்னும் மலை பகுதியில் நீங்கள் உங்களின்  வாகனத்தை நிறுத்தினால் அல்லது வேகத்தை குறைத்தீர்கள் என்றால் அது மலையை நோக்கி இழுக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

இதற்கு காரணம் அங்கு புவிஈர்ப்பு விசை இல்லாதது தான் என்று கூறப்படுகிறது.

உலகில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா

மேக்னடிக் ஹில் (இந்தியா): 

Zero gravity place in india in tamil

இது இந்தியாவில் உள்ள லேவிலிருந்து கார்கில் நோக்கி செல்லும் சுமார் 30 கி.மீ நீளமுள்ள ஒரு சிறிய பாதை, இது லடாக்கின் காந்த மலை (மேக்னடிக் ஹில்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாதையில் நீங்கள் வாகனத்தில் செல்லும்பொழுது வாகனத்தை நிறுத்தினால் அல்லது வேகத்தை குறைத்தீர்கள் என்றால் அது தானாகவே நகர தொடங்கும். மேலும் குறிப்பாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்த இடத்தை கடந்து செல்லக்கூடிய விமானம் கூட காந்த குறுக்கீட்டைத் தவிர்க்க அவற்றின் உயரத்தை அதிகரிக்கிறது.

இவைகளே உலகில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவிஈர்ப்பு விசை குறைவாக உள்ள இடங்களாகும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement