அறுசுவை பெயர்கள்
மனிதர்களாக பிறந்த அனைவராலும் தண்ணீர், உணவு, இடம், இருப்பிடம் என்பது அத்திவாசியமானது. இதில் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது. நாம் சாப்பிடுகின்ற உணவு எல்லாமே ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ருசியை தரும். இந்த ருசிகளை வைத்து தான் சாப்பிடுகின்றோம்.
இந்த ருசிகளில் நாம் அதிகமாக சாப்பிட கூடியது இனிப்பு, காரம், தான் ருசித்து தான் சாப்பிடுவோம். இந்த சுவைகளில் ஆறு வகையாக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் அறிந்தது தான், ஆனால் திடீரென்று கேட்டால் அந்த ஆறு சுவைகளும் ஞாபகம் வராது. உடனே மொபைலில் தான் தேடுவோம். அதனால் தான் இந்த பதிவில் அறுசுவை பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
அறுசுவை பெயர்கள்:
அறுசுவை பெயர்களாக இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற ஆறு சுவைகளாக இருக்கிறது.
இனிப்பு:
இனிப்பு சுவை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இனிப்பை உடலை பலபெறும். உடற்பருமன் அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அது போல இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் உடலிற்கு தீங்கினை விளைவிக்கும்.
இதில் வெல்லம், சர்க்கரை, பனக்கற்கண்டு போன்ற இனிப்பு சுவை உடையதாக இருக்கும்.
உவர்ப்பு:
உப்பு சுவை அதிகமாக இருந்தால் உவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். உவர்ப்பு சுவை அதிகமாக இருப்பதால் செரிமான திறனை அதிகப்படுத்தும். இந்த உவர்ப்பு சுவையை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.
சுரைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளில் உவர்ப்பு சுவை அதிகமாக காணப்படும்.
புளிப்பு:
புளிப்பு சுவை சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த புளிப்பு சுவையானது பசியை ஏற்படுத்துகிறது, நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது. அதிகமாக புலி[உ சுவையை எடுத்து கொண்டால் இரத்த அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மாங்காய், எலுமிச்சை, புளி, தக்காளி, நார்த்தங்காய், கிடாரங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை காணப்படுகிறது.
ஒரு மாசத்துக்கு டீ, காபிக்கு நோ சொல்லுங்க என்ன நடக்குதுன்னு பாப்பும்..
துவர்ப்பு:
துவர்ப்பு சுவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருக்கிறது. வயிற்றுப்போக்கினை தடுப்பதற்கு உதவுகிறது, பித்தத்தை சரியக வைத்திருக்க உதவுகிறது. இதனை அதிகமாக எடுத்து கொண்டால் வாத பிரச்சனை ஏற்படும்.
மஞ்சள், மாதுளை, வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றில் துவர்ப்பு சுவை காணப்படும்.
கசப்பு:
கசப்பு சுவை என்றாலே யாருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதில் நன்மைகள் நிறைந்திருக்கிறது. இந்த சுவையை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கத்தரிக்காய், சுண்டக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளில் கசப்பு சுவை உடையதாக இருக்கும்.
கார்ப்பு:
கார்ப்பு என்பது கார சுவையை குறிக்கிறது, கார சுவை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். எவ்வளவு தான் காரமாக இருந்தாலும் உஸ், உஸ் என்று போட்டு கொண்டே சாப்பிட்டு விடுவோம். நீங்கள் அதிகமாக காரம் சாப்பிட்டால் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும்.
மிளகு, கடுகு, மிளகாய், வெங்காயம், போன்றவை கார்ப்பு சுவை உடையதாக இருக்கிறது.
காரம் அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா.?
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |