அவுரி பொடி தீமைகள்..!

அவுரி பொடி நன்மைகள் மற்றும் தீமைகள் – Avuri Powder Uses and Side Effects in Tamil

அவுரி அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் ட்ரூ இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியல்லை என்றாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. பல ஆண்டுகளாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

ஆனால் இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த அவுரி செடி பல நன்மைகளை தருகிறது. மேலும் தலை முடி நிறம் கருமையாக மாறுவதற்கு இந்த அவுரி பொடி பயன்படுகிறது. சரி இந்த அவுரி பொடி எதற்கெல்லாம் பயன்படுகிறது மற்றும் இதன் தீமைகள் என்ன என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடுக்காய் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

அவுரி பொடி நன்மைகள் – Avuri Powder Uses in Tamil:

இந்த அவுரி பொடி சருமம் பளபளப்பாவத்திற்கும், முடி முத்துணர்ச்சி பெறுவதற்கும், பற்கள் மற்றும் ஈறுகள் பிரச்சனையை சரி செய்வதற்கும், புண்கள் குணமாவதற்கும், கல்லிரல் குணமாவதற்கும், சிறுநீரக பிரச்சனையை சரி செய்வதற்கும், வாய் புண்களை ஆற்றுவதற்கு, காதில் உள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், நரை முடியை கருமையாக்குவதற்கும் அவுரி பொடி மிகுந்த நன்மையளிக்கிறது.

அவுரி பொடி தீமைகள் – Avuri Powder Side Effects in Tamil:

இந்த அவுரி பொடி அல்லது இலையை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது சிலருக்கு வாந்தி, பேதி போன்ற ஜீரண தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.

பொதுவாக அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும், வறண்ட மற்றும் மெல்லிய உச்சந் தலையை உள்ளவர்களுக்கும் அவுரி பொடி எரிச்சல், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மேலும் இது ஆடைகளிலும் கறையை உண்டாக்கும். எனவே, ஷாம்பு அல்லது கண்டிஷனர் போன்ற சாயமிடுதல் செயல்பாட்டின் போது தலைமுடி தவிர வேறு எங்கும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil