ஆவாரம் பூ தீமைகள் | Avarampoo Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆவாரம் பூ தீமைகள் பற்றி கொடுத்துள்ளோம். நீங்கள் ஆவாரம் பூ பயன்படுத்தும் நபரமாக இருந்தால் அதனின் தீமைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். பூக்களின் அழகும், நறுமணமும் அத்தனை பேரையும் மயக்கும் தன்மை கொண்டது. பூக்களில் மறைந்துள்ள மருத்துவத் தன்மையை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டால் தான் அதை இறைவனுக்கு பூஜிக்க பயன்படுத்தினர். ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையது. மல்லி பூ, ரோஜா பூ , முல்லை போன்ற பூக்களை தலையில் வைத்து கொள்ளலாம்.
ஆனால் சில பூக்கள் மருத்துவ குணம் உடையதாக இருக்கும். ஆனால் தலையில் வைத்து கொள்ள முடியாது. கடவுளுக்கு பூஜை செய்வதற்கு உகந்ததாக இருக்கும். நம் ஊரில் மட்டுமில்லை எல்லா ஊரிலும் இந்த ஆவாரம் பூச்செடியினை வளர்ப்பார்கள். இதன் பூவானது மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இந்த பூ மருத்துவ குணம் உடையது. மேலும் மருத்துவ குணம் போலவே தீமைகளும் அடங்கியுள்ளது. அதனால் இதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
ஆவார பூ தீமைகள்:
- ஆவார பூவில் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளது. அதனால் அதனை அறிந்து கொண்ட பிறகு ஆவார பூவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
- ஆவார பூவை அதிகமாக எடுத்து கொண்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். மேலும் நீரிழப்பு பிரச்னையும் ஏற்படும். இரைப்பை குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். முக்கியமாக செரிமான பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
- இந்த பூவானது இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க செய்யும். அதனால் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரபூவை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
- நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளும் போது இந்த ஆவார பூவை எடுத்து கொண்டால் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
- இந்த பூவை நீங்கள் தோல் பிரச்சனைக்காக எடுத்து கொண்டால் தோலில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
- ஆவாரம் பூ பெரும்பாலானவர்களுக்கு நன்மையை அளித்தாலும், சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும். பெரும்பாலும் அரிப்பு மற்றும் சொறி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
- அவரம்பூவினை நீங்கள் டீ செய்து குடித்து வந்தாலும் சரி அதனை நீங்கள் ஒரு அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள். அதிகமாக எடுத்துக்கொண்டால் மேலே கூறியுள்ள பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
முகத்தை தங்கம் போல் வைத்திருக்கும் ஆவாரம்பூ அழகு குறிப்புகள்..!
ஆவார பூவை பயன்படுத்துவது எப்படி.?
ஆவார பூவை அப்படியே பச்சையாக எடுத்து கொள்ளலாம். அல்லது காய வைத்து கூட ஆவார பூவை எடுத்து கொள்ளலாம். இந்த பூவை காய வைத்து பொடியாக அரைத்து கொண்டு டீ போன்றவை தயாரித்து கூட எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு:
ஆவார பூவில் என்ன தான் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் இதனை நோய்க்காக எடுத்து கொள்ள நினைத்தால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
ஆயுள் இரட்டிப்பாகுமாம் இந்த ஆவாரம் பூ டீ
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |