வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா..? இவங்கெல்லாம் கம்பு சாப்பிடக்கூடாது.?

Updated On: July 4, 2025 7:15 PM
Follow Us:
kambu theemaigal in tamil
---Advertisement---
Advertisement

கம்பு தீமைகள் | Kambu Side Effects in Tamil

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், உணவே மருந்து என்ற காலங்கள் எல்லாம் மாறி தற்போது இப்போது மருந்தே உணவு என்ற அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நாம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் இப்போது உள்ள உணவுமுறை மாறி இல்லாமல் கம்பு, கேழ்வரகு, தினை மற்றும் மக்காசோளம் என இவற்றை தான் அதிகமாக உணவாக எடுத்து வந்தார்கள். அரிசி மற்றும் கோதுமை என இவற்றை எல்லாம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அளவு என்பது மிகவும் குறைவாக தான் இருந்தது. அப்படி பார்த்தால் நாம் நன்மை என்று எடுத்துக்கொள்ளும் உணவில் கூட சிறிதளவு தீமை இருந்து கொண்டு தான் உள்ளது.

ஆனால் அத்தகைய தீமையினை நாம் பெரும்பாலும் கவனிப்பது கிடையாது. இவ்வாறு கவனிக்காமல் விடுவதன் மூலமாக நம்முடைய ஏற்படும் பக்க விளைவுகளையும் கவனிக்க முடியாமல் போகும் நிலை ஆனது ஏற்பட்டு விடும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கிய பதிவில் கம்பு சாப்பிடுவதினால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உணவில் கிராம்பு சேர்த்து சமைப்பவரா நீங்கள்..  அப்போ அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் 

Kambu Side Effects in Tamil:

கம்பில் உள்ள சத்துக்கள்:

கம்பில் 10-ற்கும் மேற்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.

  • வைட்டமின் E
  • வைட்டமின் K 
  • வைட்டமின் B1
  • வைட்டமின் B2
  • வைட்டமின் B12
  • மெக்னீசியம் 
  • கால்சியம் 
  • நார்சத்து 
  • இரும்புசத்து 
  • பொட்டாசியம் 
  • பாஸ்பரஸ் 
  • புரதம் 
  • மாங்கனீசு 
  • சோடியம் 

கம்பின் தீமைகள்:

 கம்பு தீமைகள்

  • நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் கம்பில் நார்ச்சத்து ஆனது நிறைந்து இருக்கிறது. ஆகையால் இவற்றை நாம் எடுத்துக்கொள்வதன் மூலமாக செரிமான பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனை என இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
  • கம்பு பல நன்மைகளை கொண்டிருந்தாலும் கூட இதில் ஆக்சலேட்டு எனப்படும்  பொருள் காணப்படுவதினால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக உணவாக உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவும் கம்பின் தீமைகளில் ஒன்று ஆகும்.
  • அளவுக்கு அதிகமாக கம்பை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் வரலாம்.

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

கம்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

  1. சைன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள்
  2. சிறுநீரக கல் உள்ளவர்கள்
  3. வாதம், பித்தம் பிரச்சனை உள்ளவர்கள்
  4. சரும பிரச்சனை உள்ளவர்கள்

கம்பு யார் சாப்பிடலாம்:

  1. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள்
  2. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  3. மாதவிடாய் வயிறு வலி உள்ளவர்கள்
  4. வயிற்று புண் உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவில் கம்பை எடுத்துக்கொள்வது நல்லது.

கம்பு சமையல்:

கம்பு சமையல்

  • கம்பங்க்கூழ்
  • கம்பு அடை
  • கம்பஞ்சோறு
  • கம்பு இட்லி
  • புட்டு

கம்பில் இவ்வாறு பல வகையான உணவுகள் சமைக்கப்படுகிறது.

கம்மங்கூழ் தீமைகள்:

கம்மங்கூழ் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கூட சில பேருக்கு பாதிப்பைஏற்படுத்தக்கூடும் .

  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • செரிமான பிரச்சனை இல்லவர்கள் இதனை அளவோடு எடுத்து கொள்ளவேண்டும். ஏனென்றால் இதனை எடுத்து கொள்ளும் போது உங்களுடைய பிரச்சனையை அதிகப்படுத்தும்.
  • ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் கம்மங்கூழை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now