குதிரைவாலி அரிசி தீமைகள்
அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதில் நாம் மதிய உணவாக சாப்பிடும் அரிசியில் தான் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த அரிசியில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு விதமான அரிசிகளையும் வாங்கி சமைத்து ருசிப்பீர்கள்.
ஆனால் அதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை யாருமே அறிந்திருக்க மாட்டோம். ஆகவே ஒவ்வொரு அரிசிகளின் நன்மை தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் குதிரை வாலி அரிசியில் உள்ள தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குதிரைவாலி அரிசி என்றால் என்ன.?
குதிரை வாலி தினை வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் உத்தராஞ்சலின் மலைப்பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. குதிரை வாலி வழக்கமாக நாம் உண்ணும் தானியங்களான அரிசி, கோதுமை, ரவை போன்றவற்றை விட சத்து நிறைந்த சிறப்பான உணவாகும்.
குதிரை வாலி அரிசி ஊட்டச் சத்துக்களின் சிறிய கூடையாகும். அவை இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். 100 கிராம் குதிரை வாலி அரிசியில் ஒரு மனிதனுக்கு தேவையான தினசரி இரும்பு சத்து அளவில் 100 சதவீதமும், கர்ப்பிணி பெண்களின் தினசரி தேவையான இரும்பு சத்தில் 67% வழங்குகிறது.
குதிரைவாலி அரிசி தீமைகள்:
- மற்ற திணைகள் போலவே குதிரைவாலி அரிசியிலும் தைராய்டு செயல்பாட்டில் தலையிடக்கூடிய கோய்ட்ரோஜன்கள் உள்ளன. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முக்கியமாக ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள், குதிரை வாலி அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இந்த அரிசியானது சில பெருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கருஞ்சீரகம் ஆயிலிலில் இவ்வளவு இருக்கா.! இத்தனை நாளா தெரியாம போச்சே..
- நீங்கள் ஆரம்பத்தில் சாப்பிடும் போது இவை வாயு மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்கலாம். அதனால் இந்த பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை இருந்தால் குதிரை வாலி அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் கார்போஹைட்ரெட் நிறைந்த குதிரைவாலி அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |