வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சோம்பு கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்.! | Fennel Water Side Effects in Tamil

Updated On: February 4, 2025 6:35 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sombu Water Side Effects in Tamil | சோம்பு தண்ணீர் தீமைகள்

ஹலோ நண்பர்களே..! நாம் வாழும் இந்த அசர உலகில் பலரும் சாப்பிட கூட நேரமில்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காரணம் அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நோய்கள் வராமல் காத்து கொண்டனர். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இது தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். அதுபோல நோய்க்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகின்றோம். சரி அதை விடுங்க இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று. நாம் இன்று சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வெயில் காலத்தில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.. 

சோம்பின் தீமைகள் | Sombu Side Effects in Tamil:

சோம்பின் தீமைகள்

சோம்பு/பெருஞ்சீரகம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கொண்டிருக்கிறது. ஒரு சிலருக்கு பெருஞ்சீரகம் ஒவ்வாமை ஏதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தில் உள்ள கொழுப்பு மாற்ற புரதம் (எல்.டி.பி) ஆனது, அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால், அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்த்து கொள்வது நல்லது. அல்லது குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள மூலக்கூறுகள், பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் அமைப்பை ஒத்ததாக இருக்கின்றன. இது இரத்த உறைதலை தடை செய்யக் கூடியவையாக இருப்பதால் அதிகப்படியான இரத்தப் போக்குக்கு கூட காரணமாக அமையும். எனவே, கர்ப்பிணி பெண்கள் பெருஞ்சீரக விதைகள் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: 

சோம்பு தண்ணீர் தீமைகள்

பொதுவாக நம்மில் பலரும் உடல் ஆரோக்கியத்திற்காக சீரக தண்ணீர், வெந்தயம் கலந்த தண்ணீர் என்று குடித்து வருகின்றோம். அப்படி குடிப்பதில் சோம்பு கலந்த தண்ணீரும் ஓன்று. சோம்பு பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களில் இதுவம் ஓன்று. மேலும் நீங்கள் சோம்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் பெருஞ்சீரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அதுபோல சோம்பு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான் பலரும் சோம்பை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கிறார்கள். ஆனால் இதனால் சில தீமைகளும் இருக்கிறது. அதை பற்றி இங்கு காணலாம்.

சோம்பு தண்ணீர் தீமைகள்

அலர்ஜியை ஏற்படுத்தும்: ஆஸ்துமா மற்றும் பிற வகையான ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சோம்பு கலந்த தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் சிலருக்கு உடல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. மேலும் மருத்துவர்களின்  கூற்றுப்படி, வயிற்றுப் பிடிப்புகள் கூட சோம்பு தண்ணீரின் ஒவ்வாமை எதிர்வினையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சோம்பு தீமைகள்

தோலில் தொற்று ஏற்படுத்தும்: சோம்பு கலந்த தண்ணீரை குடிப்பதால், அது காண்டாக்ட் டெர்மடிடிஸ் என்ற ஒரு தோல் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இது தோல் அழற்சி மற்றும் கொப்புளங்கள், தோலில் வெடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சோம்பு தண்ணீர் தீமைகள்

கருப்பையைத் தூண்டுகிறது: மருத்துவர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் சோம்பு கலந்த தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சோம்பு கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டும் மற்றும் முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.

குறிப்பாக – ஏதேனும் நோய்க்காக மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now