தாய்ப்பால் குறைய காரணம் – My Milk is Drying up How Do I Get it Back
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்று நாம் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஒரு பதிவை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். தாய்ப்பால் என்பது குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்திற்கு மிக பெரிய அஸ்த்திவாரம் ஆகும். ஆக தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை அதிக அளவில் கொடுக்க வேண்டும். சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் என்பது அதிக அளவில் சுரந்துகொண்டே இருக்கும். தேவையான அளவு தாய்ப்பாலை கொடுத்துவிட்டு மீதம் வடியும் பாலை கறந்து கீழேதான் ஊற்றுவார்கள். ஆனால் சில பெண்களுக்கு தாய் பால் என்பது தன் குழந்தைக்கு கொடுக்க போதுமான அளவு கூட சுரக்காது. இந்த தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம் என்று பலருக்கு தெரியாது.
காரணத்தை தெரிந்துகொண்டே அந்த பிரச்சனைக்கான தீர்வை நாம் அறிந்துகொள்ள முடியும். இன்றிய பதிவில் குழந்தை பெற்றெடுத்த சில தாய்மார்களுக்கு தாய் பால் ஏன் குறைவாக சுரக்கிறது அதற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..!
தாய்ப்பால் குறைய காரணம் என்ன தெரியுமா?
கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளாக சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாமல் போனால் பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு பால் சுரப்பு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
புரோலாக்டின் என்கிற ஹார்மோன் தான் பால் சுரப்புக்கு முக்கிய காரணம். இந்த ஹார்மோன் அளவு குறைந்தால் பால் சுரப்பும் குறைந்துவிடும்.
சிலருக்கு மரபணு காரணமாக அதாவது பரம்பரை பரம்பரையாக இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு இது தொடரலாம்.
சிசேரியன் செய்த சில பெண்களுக்கு தாய்ப்பால் என்பது போதுமான அளவு சுரக்காது. ஏன் என்றால் சிசேரியன் செய்த உடனேயே அவர்களினால் எழுத்து அமர்ந்து தாய்ப்பால் என்பது கொடுக்க முடியாது, ஆனால் குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் என்பதை கட்டாயமாக கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் காலிது தாய்ப்பால் என்பதை கொடுத்தாலும் அவர்களுக்கு அவ்வளவு பெரிய அளவில் பால் என்பது சுரக்காது, குறைவான அளவு தான் தாய்ப்பால் என்பது சுரக்கும்.
இது தவிர சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காசநோய் இது போன்ற நோய்களுக்கு ரொம்ப நாட்களாக மருந்து சாப்பிட்டு வருபவர்களுக்கும் தாய்ப்பால் என்பது சுரக்காது அல்லது பால் சுரப்பு குறைவாக இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பிற்கு மனசும் ஒரு முக்கிய காரணம். அதாவது கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவத்திற்கு பிறகும் சரி உங்கள் மனமானது சந்தோசமானதாக இருக்க வேண்டும். எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே நீங்கள் அதிக கவலையுடன் இருந்தீர்கள் என்றால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையும்.
சரியான நேர இடைவெளியில் பாலூட்ட வேண்டும். குழந்தை தூங்குகிறது அப்பறம் கொடுத்துக்கொள்ளலாம் என்று இருந்தாலும் அதுவும் தாய்ப்பால் சுரப்பு குறைய காரணமாக அமையும்.
சில குழந்தைகள் மிகவும் குறைவான எடையில் பிறக்கும், அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க முடியாது. இதனால் தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் 8 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம். இந்த சமயத்தில் கர்ப்ப காலத்தில் அதிக அளவு எடை போட்டார்கள் என்றால் அவர்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தாய் பால் சுரப்பது என்பது குறைவாக தான் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |