Star Fruit Benefits in Tamil
பெரும்பாலானவர்களுக்கு பழங்கள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இவுலகிலும் பலவகையான பழங்களும் இருக்கின்றது. அவற்றில் ஓன்று தான் நட்சத்திர பழம் ஓன்று. இந்த பழம் பார்ப்பதற்கு நட்சத்திர வடிவத்தில் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். இதனுடைய நிறம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இதனுடைய சுவையும் புளிப்பு மற்றும் இனிப்பு சுவையில் இருக்கும். சரி இந்த பதிவில் நட்சத்திர பழத்தின் நன்மைகளை பற்றி அறியலாம் வாங்க.
நட்சத்திர பழம் பயன்கள்:
மலச்சிக்கல் பிரச்சனை நீங்க:
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நட்சத்திர பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளையும், மலக்கட்டுகளையும் வெளியேற்றும்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க:
பிரசவித்த தாய்மார்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாகும். இப்பழம் பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூகை கிழங்கு பயன்கள்
மூலம் குணமாக:
அஜீரணம் கோளாறு உள்ளவர்கள் இந்த நட்சத்திர பழத்தை உட்கொள்ளலாம். அதாவது அஜீரணம் கோளாறு காரணமாக வயிற்றில் சீற்றம் அதிகரித்து அது மூலப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆக இந்த மூலம் நோய குணமாக நட்சத்திரம் பழத்தினை இரவு உணவருந்திய பிறகு இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் இந்த மூலம் நோய் குணமாகும்.
சரும பிரச்சனை நீங்க:
ஓதுவாக குளிர் காலம் மற்றும் மழை காலம் வந்துவிட்டது என்றாலே சரும பிரச்சனை ஏற்படும். இந்த சரும பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த பழத்தை சாப்பிடுவதினால் நமது சருமமானது ஈரப்பதத்துடன் இருக்கும் இதனால் முக சுருக்கம், பருக்கள் இவை எல்லாம் நமது சருமத்தை அண்டாமல் சருமம் பளபளப்பாக காணப்படும்.
Star Pazhathin Nanmaigal
உடல் எடை குறையல்:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் இது சிறந்த பழம் என்று சொல்லலாம். அதாவது இந்த பழத்தை உட்கொள்வதினால் நார்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் இவை இரண்டும் நமக்கு எளிதாக கிடைக்கும். இதனால் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை வலிமையடைய செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர் இந்த நட்சத்திர பழத்தை சாப்பிட்டு வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலே போதும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியை இது பழம் நமக்கு மிக எளிதாக தருகிறது. ஆக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் என்று விரும்புபவர்கள் இந்த பழத்தை தினமும் ஓன்று சாப்பிட்டு வரலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெக்னீசியம் உள்ள உணவு எது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்..!
நரம்புகள் பலம் பெற:
நரம்புகளை பலம் பெற செய்யும் தன்மை கொண்ட பழங்களில் ஓன்று தான் இந்த நட்சத்திர பழம். ஆக இந்த நட்சத்திர பழத்தை அடிக்கடி அல்லது உங்களுக்கு எப்பொழுது எல்லாம் கிடைக்கின்றதோ அப்போது எல்லாம் இதனை வாங்கி உண்டு வாருங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எச்சரிக்கை:
இந்த நட்சத்திர பழத்தில் அதிகளவு ஆக்சாலிக் அமிலம் இருப்பதினால் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் மட்டும் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |