நீர்முள்ளி விதையை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Neermulli Seeds Benefits and Side Effects in Tamil

பொதுவாக நமது முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு மிக மிக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையும் தான். மேலும் அவர்களுக்கு பலவகையான மூலிகை மருத்துவங்களும் தெரிந்திருந்தது. அப்படி நமது முன்னோர்களுக்கு தெரிந்திருந்த பல மூலிகை மருத்துவம் இன்றைய சூழலில் அழிந்து கொண்டு வருகின்றது என்றே கூற வேண்டும்.

அப்படி நமது முன்னோர்களால் பலவகையான மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட நீர்முள்ளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதனை பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி நம்மில் பலருக்கும் சரியாகவும் முழுமையாகவும் தெரியாது என்பதே உண்மை. அதனால் தான் இன்றைய பதிவில்  நீர்முள்ளி விதை தீமைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

பூனைக்காலி விதையை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் தீமைகள்

நீர்முள்ளி விதை நன்மைகள்:

Neermulli Seeds Benefits in Tamil

சத்துக்கள் உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்கிறது:

இந்த நீர்முள்ளி விதையை பொடியாக செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உடலால் உறிஞ்சப் படும் திறனை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கச் செய்து ஆரோக்கியம் மற்றும் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.

கல்லீரலை பலப்படுத்த:

பொதுவாகவே இந்த நீர்முள்ளி விதையில் கல்லீரலை பாதுகாக்கும் பண்புகள் அதிக அளவு உள்ளது. மேலும் இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களை உடலில் இருந்து அகற்றவும் உதவுகிறது.

செரிமானத்தை மேற்படுத்த உதவுகிறது:

இதில் உள்ள லேசான கார்மினேட்டிவ் மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து சிறந்த செரிமானத்தை அளிக்கின்றது. மேலும் இது வாய்வு, வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற அனைத்து செரிமான கோளாறுகளுக்கும் நம்ப முடியாத அளவில் நிவாரணம் அளிக்கிறது.

கடுக்காய் பொடியை பயன்படுத்துவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

கண்பார்வை மேம்பட:

இதில் உள்ள தாவர சேர்மங்கள் சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் கண்பார்வை மற்றும் கண் கோளாறுகளை போக்க உதவுகிறது. மேலும் மாலைக்கண் நோயை போக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது:

இது நமது உடலின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைப் பாதுகாப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றது. இதன் மூலம் சர்க்கரை நோய் ஏற்படுவதை குறைகின்றது.

நீர்முள்ளி விதை தீமைகள்:

இந்த நீர்முள்ளி பெரிய அளவிலான பக்கவிளைவுகளை கொண்டிருக்கவில்லை.

ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீர் முள்ளி பாத்துகாப்பானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை. எனவே இதனை பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement