பல் ஈறு வலி வீட்டு வைத்தியம் | Pal Eeru Vali Kunamaga Vaithiyam..!
நாம் எந்த நேரத்தில் எப்படி இருக்க முடியும் என்று இந்த காலத்தை பொறுத்தவரை சொல்லவே முடியாது. ஏனென்றால் நாம் வாழும் நடைமுறை வாழ்க்கை என்பது அந்த வகையில் தான் இருக்கிறது. ஒருநாள் நல்ல முறையில் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அடுத்த நொடி என்ன நிகழும் என்பது நமக்கு அவ்வளாகவே தெரியாது. அந்த வகையில் நமது உடலில் காணப்படும் பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சமாளித்து விடலாம். ஆனால் சிறிய வலியினை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் பல் மற்றும் ஈறு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலி என இதுபோன்ற வலிகளை தாங்கிக்கொள்ள முடியாது. உடனே இந்த வலிகளை நாம் தாங்கிக்கொள்ளாமல் மாத்திரைகளை தான் எடுத்துக்கொள்வோம். ஆனால் இவ்வாறு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் அவ்வளவாக நல்லது கிடையாது. ஆகவே இன்றைய பதிவில் பல் ஈறு வலி நீங்க வீட்டு வைத்தியம் என்ன செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
பல் ஈறு வலி குணமாக
பல் வலி குணமாக:

குறிப்பு- 1
பூண்டில் பல வகையான சத்துக்கள் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆகவே பூண்டு ஆனது பல் வலியை குணப்படுத்த சிறந்த ஒரு மருந்தாக இருக்கிறது. ஆகையால் பல் வலி உள்ள இடத்தில் பூண்டு பல்லை வைப்பதன் மூலம் வலி படிப்படியாக குறையும்.
குறிப்பு- 2
அதேபோல் வலி உள்ள இடத்தில் ஒரு காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தரம் கொடுப்பதன் மூலம் பல் வலி சற்று குறைய தொடங்கும்.
ஈரல் வலி குணமாக:

குறிப்பு- 1
தேங்காய் எண்ணெயினை நாம் பெரும்பாலும் தலைக்கு தான் அதிகமாக பயன்படுத்துவோம். ஏனென்றால் முடியின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான்.
ஆனால் தேங்காய் எண்ணெய் இதற்கு மட்டும் இல்லாமல் ஈறு வலிகளை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே 2 சொட்டு தேங்காய் எண்ணெயினை ஈரலில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
குறிப்பு- 2
உங்களுக்கு எந்த பக்கம் ஈரலில் வலி இருக்கிறதோ அந்த பக்கம் 2 அல்லது 3 கிராம்பினை வைத்து அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து அதனை அகற்றி விடுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் ஈரல் வலி குறைய தொடங்கும்.
குறிப்பு- 3
பல் மற்றும் ஈறு வலி என எதுவாக இருந்தாலும் உடனே சுடு தண்ணீரை வைத்து அதில் கல் உப்பினை போட்டு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் மற்றும் ஈறு வலி என இரண்டும் குணமாகிவிடும்.
நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |














