முருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கா..!

Advertisement

முருங்கைக்காய் தீமைகள்

தினமும் எல்லாரது வீடுகளில் சைவம் மற்றும் அசைவம் இந்த இரண்டு வகைகளில் தான் சமையலை சமைப்பார்கள். அப்படி பார்த்தால் என்ன சமையல் சமைக்கிறார்கள் என்பதற்கு ஏற்றவாறு தான் காய்கறிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் முருங்கைக்காயினை மட்டும் அப்படி பயன்படுத்த மாட்டார்கள். அதாவது சாம்பார், புளிக்குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் குருமா குழம்பு என அனைத்து வகையான குழம்பிலும் முருங்கைக்காயினை சேர்த்து சமைப்பார்கள்.

முருங்கைக்காயினை வைத்து குழம்பு செய்வது மட்டும் இல்லாமல் வறுவல், குருமா, மசாலா என இவை அனைத்தையும் செய்வார்கள். இதன் படி பார்த்தால் முருங்கைக்காய் பிரியர்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொண்டு தான் இருகிறார்கள். அப்படி பார்த்தால் முருங்கைக்காயினை சாப்பிடலாம், ஆனால் அதுவும் அளவோடு தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ஆகிவிடும். எனவே முருங்கைக்காயிலும் தீமைகள் என்பது இருக்கிறது. எனவே அது என்னென்ன தீமைகள் என்று பார்க்கலாம் வாங்க..!

முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B3, கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம், இரும்புசத்து, நார்ச்சத்து, சோடியம், கொழுப்புசத்து மற்றும் கலோரிகள் என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் முருங்கைக்காயில் நிறைந்து இருக்கிறது.

முருங்கைக்காய் பயன்கள்:

 முருங்கைக்காய் பயன்கள்

  • முருங்கைக்காய் உயர் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்க உதவுகிறது. மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்யவும், உடல் உறுப்புகளை சிறப்பாக செயல்பட செய்யவும் முருங்கைக்காய் பயன் அளிக்கிறது.
  • அதோடு மட்டும் இல்லாமல் முருங்கைக்காய் நமது கண் பார்வையினை சிறப்பாக வைக்க செய்கிறது. அதாவது நமது கண்ணில் காணப்படும் விழித்திரையில் இருக்கும் நச்சுக்களை அகற்றி கண் பார்வையை மேம்படுத்துகிறது.
  • நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்வதற்கு முருங்கைக்காய் நன்மை அளிக்கிறது.
  • இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதனால் முருங்கை காயினை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் காணப்படும் தேவையற்ற கொழுக்களை குறைய செய்கிறது.
  • முருங்கைக்காயில் கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதனால் இதனை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது எலும்பினை வலுப்பெற செய்கிறது.
  • நம்முடைய இரத்த ஓட்டத்தில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை முருங்கைக்காய் நீக்கும் தன்மையினை கொண்டிருப்பதனால், இதன் விளைவாக சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறைவதோடு மட்டும் இல்லாமல் முக அழகினையும் கூட்டுகிறது.
முருங்கை கீரை தீமைகள்

முருங்கைக்காய் தீமைகள்:

 drumstick side effects in tamil

  • பொதுவாக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் காய்கறிகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே குறைந்த இரத்த அழுத்த உள்ளவர்கள் போதுமான அளவு முருங்கை காயினை சாப்பிடுவதும் மேலும் இரத்த அழுத்தக்குறைக்கும்.
  • அதேபோல் குறைந்த இரத்த சர்க்கரை அளவினை உடையவர்கள் முருங்கைக்காயினை சாப்பிடுவதன் மூலம் சர்க்கறை அளவினை குறைக்க செய்யும்.
  • மேலும் கர்ப்பிணி பெண்களும் முருங்கை காயினை எடுத்துக்கொள்வதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • அதிக பித்தத்தை உண்டு செய்யலாம்: முருங்கைக்காய் உடலின் வெப்பத்தைக் கூட்டக்கூடியது. அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு பித்தம் அதிகரித்து வயிற்று எரிச்சல், மூச்சுத் திணறல் அல்லது அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்: முருங்கைக்காயில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. தாழ்ந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட்டால், மேலும் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு அவதூறு: முருங்கைக்காய் கருப்பை தசைகளை சுருங்கச் செய்யும் தன்மை கொண்டது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், கருப்பைச் சுருக்கம் ஏற்பட்டு கரு சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்தலாம்.
  • அதிக காய்ச்சலுக்கு காரணமாகலாம்: அதிகப்படியான முருங்கைக்காய் உட்கொள்ளும் போது உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் அல்லது தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்: முருங்கைக்காயை அதிகமாக உட்கொண்டால், சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம். சிலருக்கு அதே நேரத்தில் மலச்சிக்கலாகவும் அமையலாம்.

எனவே முருங்கைக்காயினை போதுமான அளவு மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் வராமல் தடுக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement