மூக்கில் நீர் வடிதல் காரணம் என்ன தெரியுமா.?

Advertisement

மூக்கில் நீர் வடிதல் காரணம்

பொதுவாக வெயில் காலம் வந்தாலே வேர்க்குரு,அம்மை போன்ற பிரச்சனை ஏற்படும். அதுவே குளிர்காலம், மழைக்காலம் வந்தால் சளி மற்றும் இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதற்கான சே=சிகிச்சையை பெறுகின்றோம்.

இப்படி சளி, காய்ச்சலுக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் சில பேருக்கு மூக்கு ஒழுகி கொண்டே இருக்கும். இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள். இப்படி பிரச்சனை வந்து அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிடுவதை விட அந்த பிரச்சனைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு அந்த தவறுகள் செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் மூக்கில் நீர் வடிய காரணம் என்னவென்று அறிந்து கொள்வோம்.

Mookil Neer Vadithal Tamil:

மூக்கில் நீர் வடிவதற்கு ஐந்து விதமான காரணங்கள் இருக்கிறது, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அறிந்து கொள்வோம்.

ஒவ்வாமை பிரச்சனை:

ஒவ்வாமை பிரச்சனை

சில பேருக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். மேலும் காலநிலை மாறுபட்டாலும் மூக்கில் நீர் வடிதல் ஏற்படக்கூடும். நல்ல வாசனை நிறைந்த பூக்கள் அல்லது உணவுகள் போன்றவற்றை நுகரும் போது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம் , இதனாலும் மூக்கில் நீர் வடியக்கூடும்.

நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை மலம் வழியாக கரைந்து வெளியே வர கசாயம்..!

ஜலதோஷம்:

பருவகால மாறுபட்டால் ஜலதோஷம் பிரச்சனை ஏற்படும். ஜலதோஷம் அல்லது மேல் சுவாச நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த சளியானது சவ்வு, மூக்கின் புறணி ஆகியவற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அதிகப்படியான சளி உருவாவதற்கு வழிவகுத்து மூக்கு ஒழுகுதல் அல்லது நாசி நெரிசல் போன்ற நிலையை ஏற்படுத்துகிறது.

குளிர்ந்த நிலை:

குளிர்ந்த நிலை

நீங்கள் எப்போதும் குளிந்த இடத்திலே இருந்தால் மூக்கு ஒழுகுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். குளிர்ந்த நிலை மற்றும் வறண்ட காற்று உங்களின் நாசிப்பணியில் எரிச்சலை ஏற்படுத்தி சளியை உற்பத்தி செய்கிறது.

சைனசிடிஸ் பிரச்சனை:

சைனசிடிஸ் ள்ளது சைனஸ் என்பது ஜலதோஷத்தின் பிரச்சனையாகஇருக்கிறது . இந்த பிரச்சனையானது மூக்கின் உள்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கு எப்போதும் அடைத்த நிலையுடன் இருக்கும். இதுவேசளியை உரைப்பது செய்கிறது.

காய்ச்சல்:

காய்ச்சல் பிரச்சனை வந்தாலே சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனென்றால் காய்ச்சல் ஆனது நுரையீரல் மற்றும் மூக்கு தொண்டை போன்றவற்றில் சுவாச பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனை இருக்க கூடும்.

 

முருங்கை கீரை தீமைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 

 

 

Advertisement