ரணகள்ளி இலை பயன்கள் – Benefits of Ranakalli

Advertisement

ரணகள்ளி இலையின் மூலிகை மருத்துவ பயன்கள் – Ranakalli Leaf Benefits in Tamil

இந்த உலகில் பலவகையான மூலிகை செடிகள் உள்ளது. ஒவ்வொரு மூலிகை செடிகளுக்கு ஒவ்வொரு வகையான மருத்துவக்குணங்களும், ஒவ்வொரு வகையான நோய்களை குணப்படுத்துகின்றது. அந்த வகையில் இன்று நாம் ரணகள்ளி மூலிகை செடியின் மருத்துவ குணங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க ரணகள்ளி மூலிகை மருத்துவ பயன்கள் என்னென்ன, ரணகள்ளி பார்ப்பதற்கு ரணகள்ளி இலை எங்கு கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நெருஞ்சில் செடியின் நன்மைகள்

ரணகள்ளி மூலிகை:

ரணகள்ளி மூலிகை

ரணகள்ளி இலை பயன்கள்:

1 Antimicrobial, Antifungal, Antibacterial ஆகிய பண்புகள் இந்த மூலிகையில் இருப்பதினால் அடிபட்ட இடத்தில் உண்டாகும் காயம், ரணம் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்படும் புண் ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு இந்த ரணகள்ளி மூலிகை பயன்படுகிறது.

ரணகள்ளி இலையை பயன்படுத்தும் முறை:

இந்த ரணகள்ளி இலையின் சாறை பிழிந்து காயங்கள் உள்ள இடத்தில் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளை என்று ஒரு வாரம் வரை அப்ளை செய்து வந்தால் காயங்கள் ஆறிவிடும்.

2 இந்த ரணகள்ளி இலையை சக்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் ஒன்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனை எப்படி சாப்பிட வேண்டும் என்ற முறையும் உள்ளது அதனை மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு சாப்பிடுவது மிகவும் சிறந்து.

3 சிறுநீரக கற்களை கரைக்க இந்த ரணகள்ளி இலை பயன்படுகிறது. ஆக சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் தினமும் 5 அல்லது 10 மில்லி ரணகள்ளி இலையின் சாறை அருந்துவதன் மூலம் கூடிய விரைவில் சிறுநீரகத்தில் உள்ள கற்களை குறைத்துவிடலாம்.

4 பித்தவெடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ரணகள்ளி மூலிகையின் சாறை பிழிந்துவிட்டு அதனுடைய சக்கையை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் வைத்து கட்டி வர ஒரே வாரத்தில் பித்த வெடிப்பு குணமாகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அற்புதமான பலன்களை தரும் கொய்யா இலைகளில் சில தீமைகளும் இருக்காமே …

ரணகள்ளியில் உள்ள சத்துக்கள்:

இந்த ரணகள்ளியில் உள்ள சத்துக்கள் என்னென்னவென்றால் பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement