ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?

Advertisement

Rambutan Fruit Benefits 

பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பழங்களை அதிகமாக சாப்பிட்டு வருவோம். அதிலும் குறிப்பாக வலைப்பழம், மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளை என இத்தகைய பழ வகைகளை தான் சாப்பிடுவோம். ஆனால் இத்தகைய பழங்கள் மட்டும் இல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்தினை சிறப்பாக வைத்துகொள்ள கூடிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய பழங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் பற்றி நமக்கு சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று பழங்களில் ஒன்றான ரம்புட்டான் பழத்தில் எவ்வளவு சத்துக்கள்  மற்றும் நன்மைகள் நிறைந்து இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!

Grape Juice குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

ரம்புட்டான் பழத்தில் உள்ள சத்துக்கள்:

  1. வைட்டமின் A
  2. வைட்டமின் C
  3. மாங்கனீசு
  4. பொட்டாசியம்
  5. தாமிரம்
  6. போலேட் ‘
  7. மெக்னீசியம்
  8. கால்சியம்
  9. கொழுப்பு
  10. புரதம்
  11. நார்ச்சத்து
  12. இரும்புசத்து
  13. மாவுசத்து

மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் ரம்புட்டான் பழத்தில் நிறைந்து இருக்கிறது.

ரம்புட்டான் பழம் நன்மைகள்:

ரம்புட்டான் பழம் நன்மைகள்

  • ரம்புட்டான் பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கலாம்.
  • இந்த பழத்தில் நார்சத்து உள்ளது. அதனால இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உணவு செரிமான ஆவதை கொஞ்சம் நேரம் தாமத படுத்தி பசியினை கட்டுக்குள் வைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய உடல் எடை விரைவில் குறைகிறது.
  • இதில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து ஆனது நம்முடைய உடலில் சிறுநீர் மூலமாக வெளியே செல்லும் கால்சியத்தின் அளவினை குறைத்து எலும்புகளை பலம்பெற செய்ய உதவுகிறது.
  • உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய இரும்புசத்து மற்றும் மாவு சத்து என இரண்டும் இதில் காணப்படுவதால் ரம்புட்டான் பழத்தினை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றலுடன் நலமாக இருக்கும்.
  • உடலில் குறைந்த அளவு நீர்சத்து இருப்பவர்கள் மற்றும் வயிற்று போக்கு உள்ளவர்கள் ரம்புட்டான் பழத்தினை சாப்பிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • மேலும் ரம்புட்டான் பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் கை, கால், தோல் மற்றும் தலை முடி என இவை அனைத்தும் பளிச்சென்று இருக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா

ரம்புட்டான் பழம் தீமைகள்:

ரம்புட்டான் பழம் தீமைகள்

  • ரம்புட்டான் பழத்தினை நாம் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
  • அதேபோல் இந்த பழத்தினை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் வாந்தி அல்லது குமட்டல் போன்ற தீமைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் இந்த பழத்தினை சாப்பிடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பழம் சாப்பிடுவதனால் வயிற்றில் வெப்பம் உண்டாகிய கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
  • மேலும் ரம்புட்டான் பழம் தோல்களில் அலர்ஜியினை ஏற்படுத்துகிறது.
  • அதுமட்டும் இல்லாமல் 2- வது முறையினை சார்ந்த நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தினை சாப்பிடுவதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க செய்கிறது.

திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பவரா.. நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement