Benefits of Vilampazham in Tamil
விளாம்பழம் நம் உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தும் பழம் ஆகும். இது மர ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக விளாம்பழத்தில் நம் டூப்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. விளாம்பழத்தில் வைட்டமின் C , தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பீட்டா கரோட்டின், வைட்டமின் A உள்ளன. எனவே இதனை உட்கொள்வதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
விளாம்பழம் நன்மைகள்:
ஊட்டச்சத்து விபரங்கள்:
100 கிராம் விளாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகால் பின்வருமாறு
- கார்போஹைட்ரேட் – 31.8 கிராம்
- புரதம் – 1.8 கிராம்
- நார்ச்சத்து – 2.9 கிராம்
- பொட்டாசியம் – 600 மிகி
- வைட்டமின் சி – 8 மிகி
- கால்சியம் – 85 மிகி
- இரும்புசத்து – 0.7 மிகி
- பாஸ்பரஸ் – 50 மிகி
செரிமான பிரச்சனை நீங்கும்:
விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். மேலும், வயிற்று புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. விளாம்பழத்துடன் சிறிதளவு தேன் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் நீங்கி விடும்.
விக்கல் நீங்க:
விளாம்பழத்தில் உப்பு மற்றும் புலி சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டு வர விக்கல் பிரச்சனை நீங்கும்.
மார்பக புற்றுநோய் குணமாக:
மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்த விளாம்பழகூழுடன் தேன், சீரகம், மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து மருந்தாக கொடுக்கப்படுகிறது.
பித்த வியாதி குணமாக:
விளாம்பழத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும், விளாம்பழத்தை தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் பித்தம் அனைத்தும் முற்றிலும் நீங்கி விடும்.
நினைவாற்றல் அதிகரிக்க:
தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம்பழத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி விரைவில் குணமாகும்.
எலும்புகள் வலுப்பெற:
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் உள்ளது. எனவே இதனை நாம் உட்கொள்ளும்போது பற்களையும் எலும்புகளையும் வலுவாக வைத்து கொள்ள உதவுகிறது. முக்கியமாக விளாம்பழம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் “ஆஸ்டியோபெரோஸிஸ்” என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது.
துளசி விதை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |