வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெண்டைக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன..?

Updated On: March 26, 2025 6:40 PM
Follow Us:
ladies finger side effects in tamil
---Advertisement---
Advertisement

வெண்டைக்காய் தீமைகள்

நம்முடைய வீடுகளில் தினம் தினம் சாப்பிடும் போது காய்கறிகளை தான் அதிகமாக சாப்பிட சொல்வார்கள். ஏனென்றால் அப்போது தான் நமது உடலுக்கு தேவையான ஆற்றலும், சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழலாம் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக வெண்டைக்காயினை தான் அதிகமாக சாப்பிட சொல்வார்கள்.

ஏனென்றால் அப்போது தான் நமது மூளை நன்றாக வேலை செய்யும் மற்றும் கணக்கு பாடம் நன்றாக வரும் என்றும் சொல்வார்கள். அதனால் வேண்டாம், வேண்டாம் என்று மறுத்த பிறகும் கூட வெண்டைக்காயினை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள். அந்த வகையில் வெண்டைக்காய் பார்வை திறன் அதிகரிக்க, நினைவாற்றல் அதிகரிக்க, இரத்த அதிகரிக்க மற்றும் உடல் எடை குறைய என பல நன்மைகளை கொண்டிருந்தாலும் கூட சில பக்க விளைவுகளையும் இது கொண்டிருக்கிறது. அதனால் வெண்டைக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உணவில் கிராம்பு சேர்த்து சமைப்பவரா நீங்கள்..  அப்போ அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் 

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்:

அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் அதுவும் 100 கிராம் வெண்டைக்காயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 வெண்டைக்காயின் தீமைகள்

  1. வைட்டமின் K  35.1 கிராம் 
  2. வைட்டமின் E 0.6 கிராம் 
  3. வைட்டமின் C 20.4 கிராம் 
  4. புரதம் 2 கிராம் 
  5. கார்போஹைட்ரேட் 7.03 கிராம்  
  6.  கொழுப்பு மற்றும் நார்சத்து 9%
  7. பாஸ்பரஸ் 
  8. மெக்னீசியம் 
  9. கால்சியம் 
  10. மாங்கனீசு 
  11. இரும்பு 
  12. துத்தநாகம் 
  13. தாமிரம் 

வெண்டைக்காயின் தீமைகள்:

 வெண்டைக்காய் தீமைகள்

  • சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயில் ஆக்சலேட்டுகள் இருக்கிறது. ஆகையால் இதனை நாம் அதிக அளவு சாப்பிடுவதனால் நமது உடலில் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
  • அதேபோல் வெண்டைக்காயினை பொறுத்தவரை சோலனைன் என்ற கலவையிலான இயற்கையாகவே பெற்று இருக்கிறது. ஆகையால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் கீழ் வாதம் மற்றும் மூட்டு வலியினை சிலருக்கு ஏற்படுத்தும்.
  • மேலும் ஒரு சிலருக்கு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் பக்க விளைவுகள் காணப்படுகிறது.
  • உடம்பில் அலர்ஜி உள்ளவர்கள் வெண்டைக்காயினை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக இன்னும் அலர்ஜி அதிகம் ஆகும். இதனால் சருமத்தில் பிரச்சனைகளும் வரக்கூடும்.

வயிற்றுப்போக்கு மற்றும் வாயுத்தொந்தரவு:

  • வெண்டைக்காயில் அதிக அளவில் ஃப்ருக்டான்கள் (Fructans) என்ற கரைப்பதற்குரிய நார்ச்சத்து உள்ளது.
  • இது சிலருக்கு வயிற்றுப்பிரச்சினைகள் (வாயுத்தொந்தரவு, வயிற்று வலி, பேதி) ஏற்படுத்தலாம்.

சிறுநீரக நோயாளிகளுக்கு பாதிப்பு:

  • வெண்டைக்காயில் ஆக்ஸலேட் (Oxalate) அதிகமாக உள்ளது, இது சிறுநீரக கற்களை உருவாக்க அல்லது
  • வன்மைப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
  • சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும்.

இரத்த சர்க்கரை அதிகமாகுதல்:

  • வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், அதில் உள்ள சாலான்ஸ் (Solanine) எனும்
  • பொருள் சில நேரங்களில் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
  • இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

மருந்துகளின் செயல்பாட்டை குறைக்கும்:

  • வெண்டைக்காய் மெட்ஃபார்மின் (Metformin) போன்ற டயபெட்டீஸ் மருந்துகளின் செயல்திறனை குறைக்கக்கூடும்.
  • எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே அதிகமாக சாப்பிடவேண்டும்.

அலர்ஜி ஏற்படுத்தக்கூடும்:

  • சிலருக்கு வெண்டைக்காயின் காய்ச்சல்மூலம் தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்படக்கூடும்.
  • இது தோல் சிவத்தல், அழற்சி, குரல் வறட்சி போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வெண்டைக்காய் யார் சாப்பிடலாம்:

  • உடல் எடை அதிகம் உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • நீரிழவு நோய் உள்ளவர்கள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்

வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

  • வயிற்று போக்கு உள்ளவர்கள்
  • அலர்ஜி உள்ளவர்கள்
  • இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள்
  • சிறுநீரக கல் உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைபடி சரியான அளவில் வெண்டைக்காயினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now