7 நாட்களில் உடல் எடை குறைவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

7 Day Weight Loss Tips

இன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அத்தகைய பிரச்சனைகளில் அதிக உடல் எடை பிரச்சனையும் அடங்கும். இதற்கு நம்முடைய தவறுதலான உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட உடல் எடை பிரச்சனையை எப்படி தான் சரி செய்வது என்று நினைத்து சிலர் சரியாக சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் இதுபோன்ற செயல்களை செய்வது உடல் எடையினை மீண்டும் அதிகரிக்க தான் செய்யும். அதனால் இன்றைய பதிவில் உடல் எடையினை கூடிய விரைவில் குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும், அதற்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய 

உடல் எடை குறைய உணவு அட்டவணை:

 உடல் எடை குறைய உணவு அட்டவணை

Day- 1

உடல் எடை குறைய முதல் நாளன்று தர்பூசணி, பாகற்காய், பெர்ரி போன்ற பழங்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மதியம் 8 முதல் 12 டம்ளர் வரையிலான தண்ணீரை அருந்த வேண்டும். ஆனால் வாழைப்பழம் மட்டும் சாப்பிடக் கூடாது.

Day- 2

இரண்டாவது நாளாக உடல் எடை குறைய காய்கறிகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய காய்கறிகளையும் எண்ணெய் சேர்த்து வறுவல் முறையில் சாப்பிடாமல் நீரினால் வேக வைத்த முறையில் சாப்பிட வேண்டும்.

அதே போல் அந்நாளில் 8 முதல் 12 டம்ளர் அளவு மொத்தமாக தண்ணீர் குடித்தல் அவசியம்.

Day- 3

மூன்றாவது நாளிற்கான டையட் பிளான் ஆகா வாழைப்பழம் மற்றும் உருளை கிழங்கினை தவிர மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் வழக்கம் போல் 8 முதல் 12 டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Day- 4

உங்களுடைய உடல் பருமனை விரைவில் குறைய செய்வதற்கு நான்காவது நாளில் 4 டம்ளர் பால் மற்றும் 8 சிறிய வாழைப்பழத்தினை மட்டுமே மூன்று வேளையிலும் பிரித்து உணவாக எடுத்துகொள்ள வேண்டும். ஆனால் பாலில் சர்க்கரை, வெல்லம் இதுபோன்றவற்றை சேர்க்காமல் காய்ச்சி மட்டும் குடிக்க வேண்டும்.

8 முதல் 12 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Day- 5

5-வது நாளில் 6 தக்காளி மற்றும் பழுப்பு அரிசியுடன் கூடிய உணவுகளை சமைத்து சாப்பிடலாம். ஒருவேளை அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் மீன் எடுத்துகொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல் இனிப்பு இல்லாத ஜூஸ் மற்றும் தண்ணீரையும் எடுத்துகொள்ளலாம்.

Day- 6

டையட் பிளானின் 6-வது நாளில் பழுப்பு அரிசியுடன் பச்சை அல்லது வதக்கிய காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அசைவ சாப்பாட்டில் மீன் மட்டும் எடுத்துகொள்ளலாம்.

மேலும் இவற்றை உடன் இனிப்பு இல்லாத ஜூஸ் மற்றும் தண்ணீரையும் குடிக்கலாம்.

Day- 7

உடல் எடை குறைய கடைசி நாளான 7-வது நாளில் 4 டம்ளர் ஜூஸ், 8 டம்ளர் தண்ணீர், பழுப்பு அரிசி, பச்சை அல்லது வதக்கிய காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் மேலே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாளுக்கான டையட் பிளான் உணவு முறையினை மூன்று வேளைக்கும் பிரித்து உண்ண வேண்டும். இதற்கு மாறாக ஒரே வேளையில் அனைத்தினையும் உண்ணக்கூடாது.

தொப்பை குறைய 15 வழிகள் 

உடல் எடை குறைய சாப்பிட கூடாதவை:

  • காலை உணவினை தவிர்த்தல்
  • எண்ணெயில் பொறித்த உணவு
  • ஸ்னாக்ஸ் வகைகள்
  • குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்தல்
  • மது அருந்துதல்
  • இடைப்பட்ட நேரங்களில் உணவு உண்ணுதல்

மேலே சொல்லப்பட்டுள்ள உணவு முறை மற்றும் மற்ற செயலை தவிர்த்தல் வேண்டும். இவற்றை எல்லாம் செய்து விட்டு அப்படியே விடாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil