Amla Juice Benefits in Tamil
பொதுவாக நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனால் ஒரு சில உணவுகள் நமது உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. அப்படி நமக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்ற உணவு பொருட்களில் ஒன்று தான் இந்த நெல்லிக்காய். இதனை சிறியவர் முதல் பெரியவர் என அனைவருமே நெல்லிக்காய் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதனுடைய ஜூஸினை பருகுவதால் நமக்கு நன்மைகள் கிடைக்காது என்று ஒரு சிலர் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை. நெல்லிக்காய் ஜூஸினை தினமும் பருகுவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இன்றைய பதிவில் அறிந்து கொள்ளலாம் வாங்க..
வறட்டு இருமலாக உள்ளதா அப்போ என் பாட்டி சொன்ன இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
Nellikai Juice Benefits in Tamil:
மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். அப்படிப்பட்ட நெல்லிக்காயினை அரைத்து நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.
உடல் எடை குறைய:
பொதுவாக நெல்லிக்காயில் நமது புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.
2 வாரத்திற்கு சர்க்கரை இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா உயிருக்கே ஆபத்தா
எலும்புகள் ஆரோக்கியத்திற்கு:
நமது உடலில் உள்ள எலும்புகள் நன்கு பலம் பெற வேண்டும் என்றால் அதற்கு கால்சியம் போன்ற தாதுக்கள் தேவை. இவை நெல்லிக்காய் ஜூஸில் அதிக அளவு உள்ளது.
இதனால் நமது எலும்புகள் ஆரோக்கியம் பெறும். மேலும் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் அருந்த கொடுத்ததில் அவர்களின் எலும்புகளில் ஏற்படுகின்ற வலி மற்றும் வீக்கம் வெகுவாக குறையும் என்று கூறப்படுகின்றது.
இரைப்பை கோளாறுகள்:
நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
புளுபெர்ரி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
நீரிழிவு நோயினை தடுக்க:
அதாவது நீரழிவு நோய்யாளிகள் தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
கண்களின் ஆரோக்கியம் மேம்பட:
கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |