அமுக்கரா கிழங்கு பயன்கள் | Amukkara Kilangu Benefits in Tamil..!
நாம் காய்கறிகளில் நமக்கு பிடித்த மற்றும் விரும்ப சாப்பிடக்கூடிய கிழங்கு என்றால் அது உருளை கிழங்கு தான். ஏனென்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் முதல் உருளைக்கிழங்கை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த கிழங்கு மட்டும் இல்லாமல் கருணை கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு மற்றும் அமுக்கரா கிழங்கு என நிறைய வகையான கிழங்கு வகைகள் இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் நாம் சாப்பிடுவதும் இல்லை. அதில் காணப்படும் சத்துக்கள் என்ன மற்றும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வதும் இல்லை. ஆகவே இன்று அமுக்கரா கிழங்கில் உள்ள சத்துக்கள் பற்றியும், அவற்றை நாம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
அமுக்கரா கிழங்கு பயன்கள்
மூட்டு வலி நீங்க:
அமுக்கரா கிழங்கினை எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து உடம்பில் உள்ள மூட்டு வலி, தசை வலி, இடுப்பு வலி இவற்றிற்கும் எல்லாம் பயன்படுத்தி வருவதன் மூலம் வலி இல்லாமல் இருக்கலாம்.
வீக்கம் குறைய:
உடலில் ஏற்படும் வீக்கத்தினை குறைப்பதற்கு அமுக்கரா கிழங்கு ஆனது நன்மையினை அளிக்கும் வகையில் இருக்கிறது. அதனால் சுக்கு, அமுக்கரா கிழங்கு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு சூடு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டினை வீக்கம் உள்ள இடத்தில் தடவி வருவதன் மூலம் வீக்கம் படிப்படியாக குறையும்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் |
நரம்பு தளர்ச்சி குணமாக:
நரம்பு தளர்ச்சியினை குணப்படுத்துவதற்கு அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது நாம் 4-ல் ஒரு பங்ககாக அமுக்கரா பொடியினையும், மற்ற 3 பங்கு அளவிற்கு கற்கண்டினையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இந்த இரண்டினையும் பாலுடன் சேர்த்து காலை, மாலை என இரண்டு வேலையும் குடித்து வந்தால் போதும் நரம்பு தளர்ச்சி குணமாகி விடும்.
உடல் பலவீனம் நீங்க:
அமுக்கரா கிழங்கில் கிடைக்கும் பொடியுடன் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட வேண்டும். அதாவது 1 மண்டலம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் பலவீனம் நீங்கி ஆரோக்கியம் பெரும் என்று கூறப்படுகிறது.
மேலும் உடலில் எந்த விதமான சோர்வும் இல்லாமல் உடல் ஆனது புத்துணர்ச்சியாக இருக்கும்.
பசியின்மை நீங்க:
முதலில் அமுக்கரா கிழங்கினை பாலில் வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த கிழங்கினை காய வைத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும். இப்போது தயார் செய்து வைத்துள்ள அமுக்கரா பொடியில் 2 முதல் 4 கிராம் வரை எடுத்து தேனுடன் கலந்து தினமும் 4 வேளை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் பசியின்மை நீங்கும், உடல் எடை குறையும் மற்றும் வீக்கமும் குறையும்.
கருணை கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள் |
அமுக்கரா கிழங்கு சாப்பிடக்கூடாதவர்கள்:
- அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள்
- கர்ப்பிணி பெண்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- அதிகப்படியான உடல் சூடு உள்ளவர்கள்
- இரத்த சர்க்கரை உள்ளவர்கள்
அமுக்கரா கிழங்கு சாப்பிட வேண்டியவர்கள்:
- தூக்கமின்மை உள்ளவர்கள்
- ஆண்மை பிரச்சனை உள்ளவர்கள்
- சரும பிரச்சனை உள்ளவர்கள்
- மன சோர்வு உள்ளவார்கள்
- பதட்டம் உள்ளவர்கள்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் அமுக்கரா கிழங்கினை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சரியான அளவில் உண்ண வேண்டும். ஏனென்றால் நமக்கு பயன்களை அளித்தாலும் கூட அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |