ஆரோரூட் கிழங்கு பயன்கள் – Arrowroot in Tamil
பொதுவாக இந்த பூமியில் வளரக்கூடிய பலவகையான தாவரங்கள் உணவாகவும், மூலிகையாகவும் பயனளிக்கின்றன. அதில் சில தாவரங்கள் உணவிற்காக மட்டும் பயனளிக்கின்றன, சில தாவரங்கள் மூலிகையாக மட்டுமே பயனளிக்கின்றன. அந்த மூலிகைகளில் ஓன்று தான் இந்த கூழை கிழங்கு.. இந்த கிழங்கில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளனவாம். இந்த கிழங்கு மலை பிரேதேசங்களில் மட்டுமே வளரும் மூலிகை செடிகளில் ஒன்றாகும். இந்த கூகை கிழங்கினை ஆங்கிலத்தில் Arrowroot (ஆரோரூட்) என்று அழைக்கின்றன. இந்த கூகை கிழங்கு இன்னொரு தமிழ் பெயர் கூம்பு கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த கிழங்கு மாவாகவும் சந்தையில் கிடைக்கின்றன. சரி வாங்க இந்த பதிவில் கூகை கிழங்கு பயன்கள் மற்றும் அவற்றில் உள்ள சத்துக்களை அறியலாம்.
கூழை கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் ஆரோரூட் மாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
- கார்போஹைட்ரேட்டுகள் – 13 கிராம்
- உணவு நார்ச்சத்து – 1.3 கிராம்
- கலோரிகள் – 65 கிராம்
- சோடியம் – 26 மிகி
- ஃபோலேட் – 338 எம்.சி.ஜி
- தாமிரம் – 0.12 மிகி
- இரும்பு – 2.2
- புரதம் – 4.2 கிராம்
- துத்தநாகம் – 0.63 மிகி
- பொட்டாசியம் – 454 மிகி
- மெக்னீசியம் – 25 மிகி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முட்டையை பிரிட்ஜில் வைப்பது நமக்கு நல்லதா..! கெட்டதா..!
கூகை கிழங்கு பயன்கள் – Arrowroot Benefits In Tamil:
சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு:
இந்த கூகை கிழங்கு சிறுநீரக தொடர்புடைய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆக இந்த கிழக்கில் தயார் செய்யப்பட்ட மாவினால் காஞ்சி செய்து பருகி வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
செரிமான கோளாறு நீங்க:
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. அதாவது நம் உண்ட உணவை ஜீரணிக்க செய்கிறது , உணவை மேலும் செரிமான செய்கிறது.
உடல் வலிமை பெற:
இந்த ஆரோரூட் மாவில் செய்யப்பட்ட உணவினை எடுத்துக்கொள்வதினால் உடலுக்கு தேவையான வலிமையைப் பெற்றுத் தரும்.
உடல் சூடு குறைய:
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், உடல் உஷ்ணத்தை தணிக்க வேண்டும் என்றால் இந்த கிழங்கை சாப்பிடலாம் இதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் உஷ்ணம் இருந்தாலும் குணமாகும்.
இருமல் குணமாக:
இருமல், காய்ச்சல், தாகம் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கூகை கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும். அதாவது இந்த கிழங்கை எடுத்துக்கொள்வதன் மூலம் இருமல், காய்ச்சல், தாகம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
காசநோய் குணமாகி:
காச நோய் உள்ளவர்கள் இந்த கூகை கிழங்கு நீரினால் குளித்தால் காசநோய் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.
வயிற்றுப்போக்கு உடனே நிற்க வீட்டு வைத்தியம்:
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த கூகை கிழங்கு மாவை கஞ்சியாகக் குடிக்கலாம். பேதி, சீதபேதி போன்றவற்றில் இந்த மாவைக் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா.?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |