5 நாட்களுக்கு மட்டும் உப்பினை சாப்பிடாமல் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..?

Advertisement

Benefits of Not Eating Salt in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது அது உங்களுக்கே புரியும். அதாவது இன்றைய சூழலில் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் சாப்பாட்டில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் தங்கள் உணவில் எவற்றை எல்லாம் சேர்த்து கொள்ள வேண்டும் எவ்வற்றை எல்லாம் சேர்த்து கொள்ளக்கூடாது என்ன அளவில் சேர்த்து கொண்டால் நன்மையை அளிக்கும் என்பதையெல்லாம் கூட அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் 5 நாட்களுக்கு இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.. 

2 வாரத்திற்கு சர்க்கரை இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா உயிருக்கே ஆபத்தா

Benefits of Not Eating Salt for 5 Days in Tamil:

உப்பு

பொதுவாக உப்பில்லாத பண்டம் குப்பையில் என்று கூறுவார்கள். அப்படி உணவுகளில் மிகவும் முக்கியமான சுவைக்கு காரணமாக உள்ளது. அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான உப்பினை நாம் சில காலங்களுக்கு நமது உணவுகளில் இருந்து தவிர்த்துவிட்டீர்கள் என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

இப்பொழுது நீங்கள் உங்களின் உணவில் உப்பினை சேர்த்து கொள்ளாமல் நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

1. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க:

இரத்த அழுத்தம்

பொதுவாக நாம அனைவருமே அறிந்த ஒன்று தான். அதாவது நாம் உணவில் அதிக அளவு உப்பினை உட்கொள்வதால் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கிறது என்பது.

இப்பொழுது நீங்கள் உங்களின் உணவில் உப்பினை சேர்த்து கொள்வதை குறைத்துவிட்டீர்கள் அல்லது நிரந்தரமாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் உங்களின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

2. இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது:

ஆரோக்கியமான இதயம்

நீங்கள் உங்கள் உணவில் உப்பினை சேர்த்து கொள்வதை குறைத்து கொண்டீர்கள் என்றால் உங்களின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் உங்களின் இதயம் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இதனால் உங்களுக்கு எந்த ஒரு இதய நோய்களும் ஏற்படாது.

பால் குடிக்காமல் வெறும் 30 நாட்கள் இருந்தால் உடல் என்ன ஆகும்

3. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:

புற்றுநோய் வராமல் தடுக்க

பல ஆய்வுகளின் முடிவில் அதிக உப்பு உணவு வயிற்று புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் கூறுகிறது. அதாவது நாம் சேர்த்து கொள்ளும் உப்பு தான் நமது வயிற்றின் உட்புறத்தில் பல சேதத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

அதனால் நீங்கள் உப்பினை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதை குறைத்து கொள்வதால் உங்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

4. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

எலும்பு

சிறுநீர் கழிக்கும் போது கால்சியத்தை இழக்கிறோம், இந்த இழப்பின் அளவு நம் உடலில் உள்ள சோடியத்தின் அளவைப் பொறுத்தது. நாம் அதிக உப்பு சாப்பிட்டால், சிறுநீர் கழிப்பதன் மூலம் அதிக கால்சியம் வெளியேறி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதனால் நீங்கள் உணவில் உப்பினை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்வதால் உங்களது எலும்புகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

5. சிறுநீரகம் சீராக இயங்குகிறது:

சிறுநீரகம்

அதிக உப்பு உட்கொள்வது நமது சிறுநீரகங்களை நம் உடலில் இருந்து உப்பை அகற்ற கடினமாக உழைக்க வைக்கிறது. இது சிறுநீர் கழிப்பதன் மூலம் அதிக கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கிறது. இது சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்.

எனவே நாம் நமது உணவில் உப்பினை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால் சிறுநீரகம் மிகவும் ஆரோக்கியத்துடன் இயங்கும்.

தினமும் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement