Benefits of Stop Eating Sugar in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது அது உங்களுக்கே புரியும். அதாவது இன்றைய சூழலில் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் சாப்பாட்டில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் தங்கள் உணவில் எவற்றை எல்லாம் சேர்த்து கொள்ள வேண்டும் எவ்வற்றை எல்லாம் சேர்த்து கொள்ளக்கூடாது என்ன அளவில் சேர்த்து கொள்வது நன்மையை அளிக்கும் என்பதையெல்லாம் கூட அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் 2 வாரத்திற்கு சர்க்கரை இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க..
புளுபெர்ரி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
Benefits of Not Eating Sugar for 14 days in Tamil:
சர்க்கரை என்பது வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு விஷம் என்பது ஒரு பொதுவான கருத்து இதனை நாம் அளவோடு சாப்பிட்டால் நமது உடலுக்கு நல்லது. மாறாக இதனை அதிக அளவு சாப்பிட்டால் நமக்கு பலவகையான தீமைகளை அளிக்கும்.
இதுவே நாம் சர்க்கரையை முற்றிலுமாக சாப்பிடாமல் தவிர்த்தால் நமது என்னென்ன நன்மைகள் நிகழும் என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.
சர்க்கரையை சாப்பிடாமல் தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்:
இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்கும்:
இப்பொழுது நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலுமாக குறைத்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு அடிக்கடி பசி எடுப்பது குறையும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரையின் ஹார்மோனின் அளவு நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.
இதனால் நமக்கு அடிக்கடி பசியெடுக்கும். இதுவே நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள் உங்களுக்கு பசியே ஏற்படாது இதனால் நமது உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
சோர்வு நீங்கும்:
நாம் சாதாரணமாக உணவினை சாப்பிட்டாலும் நமக்கு சில மணிநேரம் சோர்வாக உணர்வோம். இப்பொழுது நீங்கள் சர்க்கரையை சாப்பிடுவதை முற்றுலுமாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் உங்களின் சோர்வுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உடலின் அதிகப்படியான நீர் நீங்கிவிடும்:
இப்பொழுது நீங்கள் ஒரு வாரத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீர் அனைத்தும் முற்றிலுமாக வெளியேறி உடலில் Fat மட்டுமே இருக்கும்.
இதனால் ஒரு சிலருக்கு உடல் எடை குறையும் வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினீர்கள் என்றால் இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க.
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
மனஅழுத்தம் நீங்கும்:
இப்பொழுது நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு உள்ள அனைத்து மனஅழுத்தங்களும் நீங்கிவிடும். அதனால் நீங்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் தைரியமாக கவனமாகவும் கையாளுவீர்கள்.
முகம் பொலிவு பெறும்:
நாம் சர்க்கரையை அதிக அளவு சாப்பிடுவதால் நமது உடலின் இன்சுலின் அதிகரிக்கும் இதனால் அன்ட்ரொஜென் அளவு அதிகரிக்கும் இதனால் உங்களின் முகத்தில் பருக்கள் ஏற்படும்.
இதுவே நாம் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டால் நமது முகத்தில் என்றைக்கும் முகப்பருக்கள் ஏற்படவேப்படாது. மேலும் உங்களின் முகம் நன்கு பொலிவுடன் காணப்படும்.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு நீங்கும்:
இப்பொழுது ஒருவர் அதிக அளவு சர்க்கரை சாப்பிடுகிறார் என்றால் அவரின் உடலில் இன்சுலின் அதிகரித்து அவருக்கு டெஸ்டோஸ்டெரோன் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
இதுவே நீங்க சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள் என்றால் இந்த டெஸ்டோஸ்டெரோன் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
பிற நன்மைகள்:
நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய 3 நாட்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அப்பொழுது நீங்கள் வைட்டமின் B கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள் அது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
3 நாட்களுக்கு பிறகு உங்கள் உடல் அதன் செய்யல்பட்டிருக்காக அதிகப்படியாக உள்ள Fat-டை பயன்படுத்தும். இதனால் உங்கள் இரத்த குழாயில் ஏதாவது அடைப்பு இருந்தால் அது நீங்கிவிடும்.
இதனால் உங்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படாது. அதேபோல் நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பிறகு உங்களின் மூளை அதன் கீடோன்ஸ்களை பயன்படுத்தி செயல்படும் இதனால் நரம்புசெல்கள் நன்கு செயல்படும்.
அதேபோல் உங்களின் கல்லீரலும் அதன் செயல்பாட்டிற்கு அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை எடுத்து கொள்ளும். இதனால் உங்களின் கல்லீரல் சுத்திகரிக்கப்படும்.
இதனால் உங்களுக்கு உள்ள தொப்பை குறைந்துவிடும். மேலும் சர்க்கரை நோய்யாளிகளுக்கு பொதுவாக பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான் நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொண்டால் உங்களின் சிறுநீரக செயல்பாடு அருமையாக இருக்கும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை 2 வாரங்களுக்கு நிறுத்திவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு மேலே கூறியவை அனைத்தும் நிகழும். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |