Benefits of Walking After Eating Food in Tamil
பலபேருக்கு சாப்பிட்டவுடன் நடக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் சிலபேர் சாப்பிட்டவுடன் தூங்கி விடுவார்கள். எனவே நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சாப்பிட்டவுடன் படுக்காதே சிறிது நேரம் நட என்று கூறுவார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா.? அதற்கான பதிலை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். சாப்பிட்ட பிறகு எதற்கு நடக்க சொல்கிறார்கள் சாப்பிட்ட உணவு செரிப்பதற்காக தான் என்று சிலர் கேட்பீர்கள். ஆனால் அதுமட்டுமின்றி சாப்பிட்ட பிறகு நடப்பதால் இன்னும் நிறைய நன்மைகள் இருக்கிறது. எனவே அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம் வாங்க.
Benefits of Walking After Lunch and Dinner Tamil:
உடல் எடையை குறைக்க:
சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடல் பருமன் குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் உள்ள கலோரிகள் எரிந்து ஆற்றலாக மாறுகிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதோடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் மிதமான அளவில் நடக்கலாம்.
சாப்பிட பிறகு வாயு தொலையா காரணம் என்ன தெரியுமா
செரிமானத்திற்கு உதவுகிறது:
பொதுவாக சாப்பிட்ட பிறகு உணவானது செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். இதனால் வயிற்றில் அசிடிட்டி, செரிமான கோளாறு, வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதன் மூலம் உணவு எளிதில் செரிமானம் அடைகிறது. இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
சோம்பலை நீக்குகிறது:
சாப்பிட்ட பிறகு சிலர் உடனே படுத்து விடுவார்கள். அதிலும் சிலர் சாப்பிடும்போதே உடல் சோர்வினால் படுத்துவிடுவார்கள். இதற்கு சோம்பல் தான் காரணம். எனவே சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதன் மூலம் உடலில் உள்ள சோம்பல் முறிந்து உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
சாப்பிட்ட பிறகு நடப்பது, உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்க நினைப்பவர்கள் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.
பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |