வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

Advertisement

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள் – Best Food To Eat On an Empty Stomach in Tamil

நம் உடலை சரியாக பார்த்துக்கொள்வது நம்முடைய கடமையாக உள்ளது. அதேபோல் நம்மில் சிலர் பட்னியாக இருப்பார்கள். இப்போது அவர்களுக்கு பசிக்காமல் இருக்கலாம். எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆகவே சரியாக சாப்பிடுங்கள் அப்படி உங்களுக்கு உணவுகளை சாப்பிட பிடிக்காமல் இருந்தால் அதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

அதெல்லாம் சரி தான், நீங்கள் வெறும் வயிற்றில் இருக்கும் போது என்ன பழங்களை சாப்பிடுவது என்று ஒரு கேள்வி இருக்கும். அதேபோல்வெறும் வயிற்றில் பழங்கள் மட்டும் இல்லாமல் வேற என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

Best Food To Eat On an Empty Stomach in Tamil:

காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது இந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

சூடான தண்ணீர்

காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தேன்

அதேபோல் சூடான நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பலம் பெறும். சளி இருமலுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். நன்கு தூங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாம்பழம் சாப்பிடும் போது தப்பி தவறிக்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் 

வெந்தயம்

வெந்தயத்தை இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரையும்  வெந்தயத்தையும் குடிப்பதால் வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். அதேபோல் செரிமான பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும்.

முளை கட்டிய பயிரை சாப்பிடவேண்டும். ஏனென்றால் இதில் தான் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆகவே இது தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். உடலை வலிமையாக வைத்துக்கொள்ள உதவும்.

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய காய்கள்:

காய்கள்

காய்கறிகள் சாப்பிடலாம், ஆனால் அது அனைத்தையும் சாப்பிட முடியாது. சில காய்கறிகளை மட்டும் தான் சாப்பிட முடியும். அது என்ன தெரியுமா..? அது தான் கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். இந்த காய்கறிகளில் உள்ள சாறு இரத்தத்தை சுத்தப்படுத்தி எலும்புகளுக்கு வலிமையை தருகிறது.

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள்:

பழங்கள்

அதேபோல் பழங்களில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க  மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement