Black Coffee Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு பயனுள்ள தகவலை தான் காணப்போகிறோம். பொதுவாக நம் அனைவருக்குமே டீ, காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் டீ, காபியை பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? நாம் அன்றாடம் தூங்கி எழுந்ததும் முதலில் தேடுவது டீ, காபியை தான். தூங்கி எழுந்ததும் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே போகாது. அந்தளவிற்கு டீ, காபி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. சரி அதை விடுங்க, இது தான் நம் அனைவருக்குமே தெரியுமே. நீங்கள் பிளாக் காபி குடிப்பீர்களா..? அப்போ அதில் இருக்கும் நன்மைகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சாப்பிட்ட உடன் டீ குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த சின்ன அட்வைஸ் கேட்டுக்கோங்க |
பிளாக் காபியில் இருக்கும் நன்மைகள்:
பிளாக் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மேலும் பிளாக் காபியில் வைட்டமின் B2, B3, B5, மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது:
தினமும் 1 அல்லது 2 காபியை தொடர்ந்து உட்கொள்வது இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க:
கல்லீரல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அமைதியாக செயல்படும் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். காபி இரத்தத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் கல்லீரல் நொதிகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. பிளாக் காபி கல்லீரல் புற்றுநோய், கொழுப்பு கல்லீரல் நோய், ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
டீயுடன் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ அதில் இருக்கும் தீமைகளை தெரிஞ்சிக்க வேண்டாமா |
சிறுநீர் மண்டலத்தை தெளிவாக வைத்திருக்க:
காபி ஒரு டையூரிடிக் ஆக செயல்படுவதால் இது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள். இது உங்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் காரணமாக உங்கள் வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
புற்றுநோய் செல்களை அழிக்கிறது:
காபியில் இருக்கும் காஃபின் உட்புற அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இதனால் கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்க காபி உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
👉டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா
நீரிழிவு அபாயத்தைக் குறைக்க:
பிளாக் காபி குடிப்பது நீரிழிவு அபாயத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் காபி உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கலாம். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
உடல் எடை குறைய:
பிளாக் காபி ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும் கலோரி இல்லாத பானமாகும். இதில் காஃபின் நிறைந்துள்ளது. அதனால் இது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. பசியை அடக்குகிறது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிளாக் காபியை குடிக்கலாம்.
அல்சைமர் நோய் அபாயத்தை தடுக்க:
பொதுவாக அல்சைமர் நோய் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களை பாதிக்கிறது. அதனால் பிளாக் காபி தினமும் குடித்து வருவதால் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இது நினைவாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |