கருப்பு பேரிச்சம் பழம் நன்மைகள் | Black Dates Benefits in Tamil | Karuppu Pericham Palam Benefits in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவாகி என்றாகிவிட்டது. பணத்தை சம்பாதிப்பதற்கு ஓடி ஓடி உழைக்கின்றனர். சத்தான உணவுகளை சாப்பிடாமல் கடையில் விற்கும் துரித உணவுகளை சாப்பிட்டு உடலை சீர்குலைத்து கொள்கின்றனர். அதனால் தினமும் சாப்பிட உணவில் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதனால் இந்த பதிவில் கருப்பு பேரீட்சை பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கருப்பு பேரிச்சம்பழம் பயன்கள்:
எலும்புகள் வலிமை பெற உதவகிறது:
பேரீட்சைப்பழத்தில் தாமிரம், செலினியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உங்களின் எலும்புகளை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் எலும்பு சம்மந்தப்ட்ட பிரச்சனைகள் வராமலும் பாதுகாத்து கொள்கிறது. இதில் வைட்டமின் கே எலும்புகளின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் தினசரி பேரீட்சைப்பழம் சாப்பிட வேண்டும்.
நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?
மூளைக்கு நல்லது:
கருப்பு பேரீட்சைப்பழத்தில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. இவை குழந்தைக்கு ஏற்படும் அல்சைமர் நோய் வராமல் இருப்பதற்கு பேரீட்சைப்பழம் எடுத்து கொள்வது நல்லது. மூளையில் பிளாக் ஏற்படாமல் தடுப்பதற்கும் பேரீட்சைப்பழம் உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
பேரீட்சைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீட்சைப்பழத்தில் 8 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் குடல் செய்லபாடுகளை மேம்படுத்த உதவுகிறது. பேரீட்சைப்பழத்தை நீங்கள் தினமும் எடுத்து கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளாலாம்.
சர்க்கரை நோய்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்றவற்றை குறைக்கவும், சரியான அளவில் வைத்து கொள்ளவும் பேரீட்சைப்பழம் உதவுகிறது. இவை இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் குளுக்கோஸின் அளவை குறைப்பதற்கு உதவுகிறது.
ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.
சருமத்தின் அழகை மேம்படுத்துகிறது:
இதில் வைட்டமின் சி மற்றும் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உங்களின் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதற்கு நீங்கள் தினசரி கருப்பு பேரீட்சைப்பழம் சாப்பிட வேண்டும்.
இதய ஆரோக்கியம்:
கருப்பு பேரீட்சைப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன, இது ஒரு வகை பாலிஃபீனால் எனப்படுகிறது. இவை இதய பிரச்சனை வராமல் பாதுகாக்கவும், இதய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
இரத்த சோகை:
கருப்பு பேரீட்ச்சைப்பழம் இரத்த சோகை தடுப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. மேலும் உடலில் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்வதற்கும் உதவுகிறது.
மலசிக்கல் பிரச்சனை சரி செய்ய:
பேரீட்சைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குடல் அமைப்பை மேம்படுத்தி சீராக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
எடை அதிகரிக்க:
கருப்பு பேரீட்சைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் போன்ற சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது:
கருப்பு பேரீட்சைப்பழத்தில் உள்ள அத்திவாசியமான வைட்டமின்கள் உள்ளது. இவை முடி உதிர்வதை நிறுத்தி முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |