Black Tea Benefits in Tamil
டீ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டீ பிடிக்கும். அதாவது, ஒரு சிலருக்கு மசாலா டீ பிடிக்கும், ஒரு சிலருக்கு இஞ்சி டீ பிடிக்கும். ஒரு சிலருக்கு ப்ளாக் டீ பிடிக்கும். இதில் ப்ளாக் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடண்டகள் அதிகம் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ப்ளாக் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
உடல் எடை குறைகிறது:
ப்ளாக் டீ குடிப்பதால் செரிமானம் நன்றாக நடைபெறுகிறது. முக்கியாக ப்ளாக் டீ உள்ள ப்ளவனாய்டுகள், எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், கல்லீரலில் கொழுப்பு தேங்காமல் கரைக்கிறது. ஆகையால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்த பிறகு, ஒரு கப் பிளாக் டீ குடித்து வரலாம்.
நீரிழுவு நோய் குறைய:
ப்ளாக் டீ குடிப்பதன் மூலம் நீரிழுவு நோய் குறைய அதிகம் வாய்ப்புள்ளது. இதிலுள்ள ப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் கிளைசெமிக் குறியீட்டை குறைத்து நீரிழுவு நோயின் அளவை குறைக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நாட்களில் சளி இருமலை சரி செய்யும் மூலிகை கஷாயம்
மன அழுத்தம் நீங்க:
ப்ளாக் டீயில் உள்ள அமினோ அமிலங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆகையால், மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் 1 கப் ப்ளாக் டீ எடுத்து கொள்வது நல்லது.
வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது:
ப்ளாக் டீயில் உள்ள கேடசின், ஃபிளாவனாய்டு மற்றும் டானின் போன்ற பாலிபினால்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் நுர்நாற்றம், பல் பூச்சி, ஈறு வீங்குதல் போன்றவற்றை நீக்கி வாயை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
இதய ஆரோக்கியமாக இருக்க:
ப்ளாக் டீயில் உள்ள காலிக் அமிலம், ஃபிளாவனோல்ஸ் மெற்றும் தீஃப்ளேவின்ஸ் நிறைந்துள்ளன. இது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை ஒழுங்குபடுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
புற்றுநோயை தடுக்க உதவுகிறது:
பிளாக் டீ உடலில் உள்ள அசாதாரண செல்களை அளிக்கிறது. இது புற்றுநோய்க்கு எதிரான ப்ரீரேடிக்கலைதடுத்து புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. முக்கியமாக, பிளாக் டீ குடிப்பதன் மூலம் தோல், கருப்பை, மார்பகம் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
எலும்புகள் வலுவடைய:
பிளாக் டீயில் உள்ள ப்ளவனாய்டுகள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவடைய செய்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய உப்பு போட்டு டீ குடியுங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |