வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எலும்பு வலிமை இந்த உணவுகள் எல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க..

Updated On: June 21, 2023 12:41 PM
Follow Us:
bone strength food in tamil
---Advertisement---
Advertisement

எலும்பு வலிமை பெற

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் எலும்புகள் ஆரோக்கியமாக வைத்து கொள்வதும் முக்கியமானது. இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி சம்பாதிக்கின்றனர். இதனால் உணவுகளை சரியாக எடுத்து கொள்ள முடிவதில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் வயதான பிறகு தான் எலும்பு தேய்மானம், வலிகள் போன்றவை ஏற்படும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே எலும்பு தேய்மானம், கால் வலி, கை வலி போன்றவை ஏற்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் எலும்பு பலமாக இருப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

எலும்பு பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்:

தயிர்:

எலும்பு பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்

தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவதால் கால்சியத்தையும், வைட்டமின் டி-யையும் அதிகரிக்கலாம். அதனால் தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் தயிரை சேர்த்து கொள்ளவும்.

பால்:

எலும்பு பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்

தினமும் 3 கிளாஸ் பால் குடிப்பதன் மூலம் கால்சியத்தின் அளவை அதிகரிக்கலாம். அதனால் தினமும் பாலை சேர்த்து கொண்டு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

கீரை வகைகள்:

எலும்பு வலிமை பெற

கீரைகளில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உங்களது உணவில் தினமும் எதாவது ஒரு கீரைகளை எடுத்து கொள்ளவும்.

பாதாம்:

எலும்பு வலிமை பெற

உலர் பழங்கள் மற்றும் பாதாமில் கால்சியம் மற்றும் வைட்டமின் D போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஏதவாது ஒரு நான்கு பாதாமை  உங்களை உணவில் சேர்த்து கொண்டால் எலும்பை பலமாக வைத்து கொள்ள முடியும். 

முட்டைகோஸ்:

எலும்பு வலிமை பெற

முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் முட்டைகோஸ் நல்ல உணவாக இருக்கிறது.

எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..!

பிராக்கோலி:

எலும்பு வலிமை பெற

இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை பலமாக வைத்து கொள்வதற்க்கு உதவுகிறது. அதனால் உங்கள் உணவில் தினமும் பிராக்கோலியை சேர்த்து கொள்ளவும்.

கொழுப்புள்ள மீன்:

எலும்பு வலிமை பெற

சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

முட்டை:

எலும்பு வலிமை பெற

முட்டையில் புரத சத்து, கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now