வெண்ணெய் பழம் சாப்பிடுவார்களா இருந்தால் இதை தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க..

Advertisement

Butter Fruit Benefits in Tamil

பச்சை நிறத்தில் பட்டர் புரூட் என்று சொல்லப்படும் அவோகேடா பழத்தை பார்த்திருப்பீர்கள். இதனின் ருசி எப்படி இருக்கும் என்று தெரியாமல் இதனை பலரும் வாங்கி சாப்பிட்டிருக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த பதிவில் பட்டர் புரூட் பழத்தில் உள்ள நன்மைகளை பதிவிட்டுள்ளோம். இதை படித்து  பார்த்தால் நீங்கள் அடுத்த முறை பட்டர் புரூட் பழத்தை வாங்காமல் வர மாட்டீங்க.. அப்படி என்ன பழத்தில் இருக்கிறது தெரிந்து கொள்வோம் வாங்க..

அவகோடா பழம் பயன்கள்:

பொட்டாசியம் சத்து:

மனிதனின் உடலுக்கு பொட்டாசியம் சத்து ரொம்ப முக்கியமானது. இதற்கான சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில்லை.  வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியத்தின் அளவை விட அவோகேடா பழத்தில் அதிகமாக இருக்கிறது. பொட்டாசியம்அதிகமாக இருந்தால் தான் இரத்த அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

இதயத்திற்கு ஆரோக்கியம்:

இதயத்திற்கு ஆரோக்கியம்

அவோகேடா பழத்தில் காணப்படும் பீட்டா-சிட்டோஸ்டெரால்  என்ற சேர்மம் நலன் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இந்த பழத்தை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்க உதவுகிறது. 

முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

அவோகேடா பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலை சரியாக பராமரித்து செரிமான பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கிறது.

தோல் மற்றும் முடிக்கு ஆரோக்கியம்:

இந்த பழத்தில் சரும பாதுகாப்பிற்காக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  அதற்கு வெண்ணெய் பழத்தை சாறாக பிழிந்து குடிப்பதால் இதில் உள்ள பீட்டா கரோட்டீன் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. முடி வளர்வதற்கும் உதவி செய்கிறது. முடி நரைப்பதையும் தடுக்கிறது.

பார்வை திறன்:

பார்வை திறன்

அவோகேடா பழத்தில் கரோட்டினாய்டுகள் இருப்பதால் கண்புரை, வயது தொடர்பான கண் பிரச்சினைகள் மற்றும் மாகுலர் சிதைவு போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது. இதற்கு நீங்கள்  தினமும் சிறிது அவகேடோ ஜூஸை குடிக்க வேண்டும், இல்லையென்றால் பழமாக சாப்பிட வேண்டும்.

மூட்டு வலி:

மூட்டு வலி

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் மூட்டு வலி மற்றும் தசை வலியிலிருந்து விடுபடுவதற்கு அவோகேடா பழம் உதவுகிறது. இதற்கு நீங்கள் தினமும் அவோகேடா பழத்தை ஜூஸாக ஒரு கிளாஸ் குடித்து வர வேண்டும்.

வாய் துர்நாற்றம்:

இந்த பழத்தில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் வாயில் உள்ள பாக்ட்ரியாக்களை அழித்து வாயில் துர்நாற்றம் இல்லாமல் பாதுகாக்கிறது.

இந்த பழத்தில் உள்ள கரோட்டினாய்டு மற்றும் மோனோசாச்சுரேட்டட்  புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் பிரி ரேடிக்கல்லிருந்து பாதுகாக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து தடுக்கிறது.

நீங்க வில்வ பழத்தை பார்த்திருக்கிறீர்களா..! அப்போ இதை தெரிஞ்சிக்கலனா எப்படி..!

கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.

எடை குறைய:

எடை குறைய

அவோகேடா பழத்தில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகப்படுத்தாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தின் சாற்றை குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

Advertisement