சப்பாத்தி உள்ள கலோரி | 1 Chapati Calories
பொதுவாக நாம் அனைவரும் காலை மற்றும் இரவு நேரத்தில் டிபன் சாப்பாட்டினையும், மதியம் ஒரு வேளை மட்டும் அரிசி மாதிரியான உணவுகளையும் உண்ணுகிறோம். அதில் பெரும்பாலான நபர்கள் கோதுமையில் செய்யக்கூடிய உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள். அதாவது சப்பாத்தி, பூரி, கோதுமை தோசை மற்றும் கோதுமை புட்டு என இவற்றை தான் உணவாக எடுத்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக அதிகமாக சப்பாத்தி மற்றும் பூரியினை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த இரண்டில் நமது உடலுக்கு சப்பாத்தி தான் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் எண்ணெய் அதிகமாக சேர்க்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும். அதேபோல் அன்றாடம் நாம் சாப்பிடும் சப்பாத்தியில் எத்தனை கலோரிகள் உள்ளது என்பதை இன்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
1 சப்பாத்தியில் உள்ள கலோரிகள்:
நாம் சாப்பிடும் நடுத்தர அளவில் உள்ள 1 சப்பாத்தியில் 106 கலோரிகள் உள்ளது. இதில் 3.8 கிராம் புரதமும், 22.3 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.5 கிராம் கொழுப்பும் நிறைந்து உள்ளது.
3 சப்பாத்தியில் உள்ள கலோரி:
அதேபோல் 3 சப்பாத்தியில் தோராயமாக 317 கலோரிகள் நிறைந்து இருக்கிறது. மேலும் இது நடுத்தர அளவில் உள்ள சப்பாத்தியின் கலோரியின் அளவு ஆகும்.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் 66.97 கிராம், கொழுப்பு 1.56 கிராம் மற்றும் புரதம் 11.53 கிராம் காணப்படுகிறது. சப்பாத்தி அன்றாட வாழ்க்கையில் நாம் சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெரும். மேலும் இதர சில நோய்களுக்கு தீர்வாகவும் அமையும்.
ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா
சப்பாத்தியில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் B1
- வைட்டமின் B2
- வைட்டமின் B6
- வைட்டமின் B9
- வைட்டமின் E
- இரும்புச்சத்து
- கால்சியம்
- மெக்னீசியம்
- பாஸ்பரஸ்
- அயோடின்
- காப்பர்
- ஜிங்க்
- பொட்டாசியம்
மேலே கூறியுள்ள சத்துக்கள் அனைத்தும் சப்பாத்தியில் காணப்படுகிறது.
சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எப்போதும் ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்றாலும் அல்லது சுறு சுறுப்பாக இருக்க வேண்டும் என்றாலும் சப்பாத்தி சிறந்த ஒன்று. அதனால் தினமும் நாம் சப்பாத்தி சாப்பிடுவதன் மூலம் ஆற்றலுடன் இருக்க முடியும்.
சுகர் மற்றும் பிரஷர் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு நேரத்தில் சரியான அளவில் சப்பாத்தி சாப்பிடுவதன் மூலம் இந்த இரண்டினையும் சரியான அளவில் வைத்து நாம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் சப்பாத்தி சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள ஜிங்க் மற்றும் இதர மினரல் சத்துக்கள் நமது முகத்தை பளிச்சென்று வைக்க உதவுகிறது.
சப்பாத்தியினை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் உள்ள இரும்புசத்து நமது உடலின் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க செய்கிறது.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கலோரிகள் குறைந்த அளவு உள்ள இந்த சப்பாத்தியினை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை ஆனது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
சப்பாத்தியினை நாம் சாப்பிட்டவுடன் எளிதில் இது செரிமானம் அடைந்து விடுவதால் மலச்சிக்கல் வராமல் இருக்க செய்கிறது.
தினமும் சப்பாத்தி சாப்பிடுவரா நீங்கள்.. அப்போ அவற்றின் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |