ஆரஞ்சு பழத்தில் உள்ள கலோரிகள்
மனிதனது அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றிலும் உணவே மிகவும் முதன்மையானதாக கருதப்படுகின்றது. இந்த உலகத்திலுள்ள மனிதர்கள், விலங்குகள் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. சிறந்த உணவுகளை தகுந்த நேரத்தில் உண்தல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறையாகும்.
“உண்டி முதற்கே உலகு” என்று நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதாவது உணவை அடிப்படையாக வைத்தே இந்த உலகு இயங்குகின்றது. உணவு உடலிற்கு இயக்கசக்தியையும் வலிமையையும் தருகின்றது. ஒருவர் சரிவர உணவை உட்கொள்ளவிட்டால் அவரால் தனது ஏனைய வேலைகளை சரிவர செய்ய இயலாது. நோய்கள் நம்மை அண்டிவிட்டால் மகிழ்ச்சியாக வாழ இயலாது. நோய்நொடிகள் நம்மை நெருங்காது இருப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவை தகுந்த நேரத்திற்கு உண்ண வேண்டும். நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் உணவில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை நம் தெரிந்து வைத்திருப்பது சிறந்தது. அந்த வகையில் இன்று ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஆரஞ்சுகளில் ஊட்டச்சத்து:
- 47 கலோரிகள்
- 3 கிராம் நார்ச்சத்து
- 12 கிராம் சர்க்கரை
- 1 கிராம் புரதம்
- 14 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ
- 70 மில்லிகிராம் வைட்டமின் சி
- 237 மில்லிகிராம் பொட்டாசியம்
- 15.4 கிராம் கார்போஹைட்ரேட்
- கொழுப்பு அல்லது சோடியம் இல்லை
ஆரஞ்சு சதையில் 87% நீர், 12% கார்போஹைட்ரேட் , 1% புரதம் மற்றும் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது. மேலும் ஆரஞ்சில் வைட்டமின் சி நிறைந்த உணவாக காணப்படுகிறது.
ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
ஆரஞ்சுகளின் ஆரோக்கிய நன்மைகள்:
உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் வளர வைட்டமின் சி உதவுகிறது.
உடலில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தவும்.
மென்மையான சருமத்தை வழங்கவும் ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது.
இரத்த சோகைக்கு எதிராக போராட வைட்டமின் சி பயன்படுகிறது.
ஆரஞ்சில் உள்ள சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆரஞ்சுகளின் ஆரோக்கிய அபாயங்கள்:
சில நேரத்தில் அதிகப்படியான வைட்டமின் சி உங்கள் உடலுக்கு தேவையானதை விட அதிக நார்ச்சத்து மற்றும் சர்க்கரையை கொடுக்கலாம். இதனால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், தலைவலி மற்றும் தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
இது போன்று நாம் பயன்படுத்தும் அனைத்து உணவுகளிலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றை பற்றி தெரிந்துக்கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |