Can Diabetics Drink Young Water in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், சுற்றுசூழல் மாசும் தான் காணப்படுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவை மருந்தாக உண்டு நோய்களை விரட்டினார்கள். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உண்டு நோய்களை வரவழைக்கின்றோம். மருந்து கண்டுபிடித்த காலம் மாறி நோய்களை கண்டுபிடித்து வருகின்றோம். இன்னும் சொல்லப்போனால் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்க இது நமக்கு தெரிந்த விஷயம் தான். சரி வாங்க நண்பர்களே நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..? என்று தெரிந்து கொள்வோம்..!
வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள் |
நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?
பொதுவாக இளநீர் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இளநீர் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி குடிப்பார்கள். இளநீரின் சுவை யாருக்கு தான் தெரியாது சொல்லுங்கள். இயற்கையாக கிடைக்கும் பானம் என்றால் அது இளநீர் தான்.
அதுபோல இதில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றன. இளநீரில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. அதனால் தான் பலரும் இளநீரை பருகி வருகிறார்கள். இளநீரில் வைட்டமின் எ, பி, சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, தயமின், ரிபோஃபிளாவின், நியாசின், நார்ச்சத்து, கனிமச்சத்து, நீர்சத்து போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன.
மேலும் இளநீரின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 கோடை ஸ்பெஷல் இளநீர் மருத்துவ பயன்கள்
சரி இப்போது அனைவருக்குமே ஒரு கேள்வி இருக்கும். அதாவது இளநீரில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. அதுபோல இதில் சுவையும் அதிகம் இருக்கிறது. ஆனால் இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இளநீரை சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி இருக்கும்.
ஆனால் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் இளநீரின் அதிகபட்ச சர்க்கரையின் அளவு 250 மில்லி தான். எனவே இவை மற்ற குளிர்பானங்களை விட குறைவான சர்க்கரையையும், குறைவான கார்போஹைட்ரேட்டையும் தருகின்றது.
ஆகவே சர்க்கரை நோயாளிகள் இளநீர் அருந்தலாம். அதிலும் பச்சை இளநீரை விட நீரிழிவு நோயாளிகள் செவ்விளநீர் அருந்துவது மிகவும் நல்ல பயனை கொடுக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |