தினமும் சாப்பிடலாமா ?
நாம் தினம் பயன்படுத்தும் உணவுகள் அனைத்தும் சத்தானதாக இருக்குமா என்றால் அது கேள்வி குறிதான். அப்படி தினம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக முட்டை இருக்கும். முட்டை சத்தான உணவு தான். அது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் தினமும் அதனை சாப்பிடும் போது அது நமக்கு ஆரோக்கியத்திற்கு ஏதுவானதா என்று பலருக்கு சந்தேகம் ஏற்படும். முட்டை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா ? உடல் எடையை குறைக்க நினைப்பவரும் உடல் எடையை அதிகரிக்க நினைக்கும் நபரும் முட்டை தினமும் சாப்பிடலாமா இப்படி ஏகபட்ட கேள்விகள் நமது மூளையை கசக்கும். அதற்கெல்லாம் நீங்களும் விடை தேடிக்கொண்டுதான் இருக்கின்றிர்கள் என்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
முட்டை தினமும் சாப்பிடலாமா?
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவதால் உங்கள் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தவும்.
உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
முட்டை உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?
முட்டை சாப்பிடும் போது, கண்டிப்பாக சிறிதளவு உயர்வு உங்கள் கொலஸ்ட்ராலில் இருக்கும்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அதிக முட்டை சாப்பிடுவதால் அளவு இதய பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது.
வெண்ணெய், இறைச்சி, எண்ணெய்களில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை விட முட்டைகளில் கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் முட்டையினை அதிக அளவு உட்கொள்ளுவதை தவிர்ப்பது நல்லது.
கொலஸ்ட்ராலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்ததா?
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளதால் அதை தவிர்ப்பது சிறந்தது.
முழு முட்டைகளுக்குப் பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், கோலின் மற்றும் லுடீன் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. ஆனால் முட்டைசாப்பிடுவதால் உடலின் இறந்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உதவும் என்பதால் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கரு மட்டும் சாப்பிடலாம்.
தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |