Can You Drink Water Before Having Tea in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு டீ, காபி என்றால் மிகவும் பிடிக்குமா..? இதென்ன கேள்வி டீ பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா என்று கேட்பீர்கள். உண்மை தான் நம்மில் பலரும் உணவு உண்பதை விட டீ, காபியை தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் நாம் தேடுவது டீ, காபியை தான். சிலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். இன்று நாம் காணப்போகும் பதிவு என்ன என்று கீழ் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சாப்பிட்ட உடன் டீ குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த சின்ன அட்வைஸ் கேட்டுக்கோங்க |
டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..?
பெரும்பாலும் நம்மில் பலரும் காலையில் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பார்கள். இவ்வளவு ஏன் நம் வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி போன்றவர்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படி குடிப்பது நல்லதா கெட்டதா என்று உங்களுக்கு தெரியுமா..?
இன்னும் சொல்லப்போனால் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..? என்று கூட நம்மில் பலருக்கும் தெரியவில்லை. அதனால் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..? என்று இங்கு காணலாம்.
டீயுடன் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ அதில் இருக்கும் தீமைகளை தெரிஞ்சிக்க வேண்டாமா |
பொதுவாக டீ மற்றும் காபி இரண்டுமே அமிலத்தன்மை கொண்ட பானமாகும். அதனால் டீ மற்றும் காபி வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல இவை வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. அதனால் அதிகமாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதாவது நாம் குடிக்கும் டீ-யின் pH மதிப்பு 6 ஆகவும், காபியின் pH மதிப்பு 5 ஆகவும் இருக்கிறது. இதன் காரணமாக நாம் டீ, காபியை அதிக அளவில் எடுத்து கொண்டால் அது புற்றுநோய் மற்றும் அல்சர் போன்ற சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதுவே நாம் டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் அமில விளைவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதுபோல நாம் டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் குடலில் ஒரு லேயர் உருவாகிறது. இந்த லேயர் டீ குடிப்பதால் ஏற்படும் அமில விளைவை குறைத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பதால் உடலின் PH அளவை பராமரிக்க உதவுகிறது.
👉டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |