வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா.?

Advertisement

Can You Eat Bananas on an Empty Stomach in Tamil

அனைவர்க்கும் பிடித்த பழங்களில் ஒன்று வாழைப்பழம். அதுமட்டுமில்லாமல், அணைத்து சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகளிலும் முதலில் இடம்பெறுவது வாழைப்பழம் தான். அந்த அளவிற்கு வாழைப்பழம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரி விசயத்துக்கு வருவோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இப்படி காலையில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு கூடவே ஒரு குழப்பமும் இருக்கும். அதாவது, காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா.? என்ற குழப்பம் இருக்கும். எனவே, உங்கள் குழப்பத்திற்கான தீர்வினை இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள், இன்னும் சிலர் சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள். ஆகையால் இப்பதிவில் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா.? சாப்பிடக்கூடாது.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா.?

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா

காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான். ஆனால், வாழைப்பழத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலை உணவை உண்ணபிறகு  வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. மேலும்,
25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது. இதனால் நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைத்து கொள்கிறது. இருந்தாலும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள்: 

வாழைப்பழத்தில் அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். அதனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஆகையால், காலை உணவு சாப்பிட பிறகு, வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்.?

செரிமான பிரச்சனை:

 can you eat bananas on an empty stomach in tamil

 

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் அமிலத்தன்மை உள்ளது.ஆகையால், வெறும் வயிற்றில் அமில உணவுகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இதய பிரச்சனை:

 can we eat banana early morning empty stomach in tamil

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே, வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்வதால், இரத்தத்தில் இந்த இரண்டு சத்துக்களும் அதிகமாகச் சென்று, இதய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

சோர்வை ஏற்படுத்தும்:

வாழைப்பழம் சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் என்று என்பது உண்மைதான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதற்கு மாறாக சோர்வை உண்டாக்கும்.  எனவே, வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது. அதற்கு மாறாக காலை உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement