Who Should Not Eat Cauliflower
காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏராளமான சத்துக்கள் மற்றும் பயன்களை கொண்ட இந்த காலிபிளவரை ஒரு சிலர் மட்டும் சாப்பிடக்கூடாது அது யாரெல்லாம் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்ற இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள்:
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிபிளவர் சாப்பிட்டால் தாயின் வயிற்றில் வாயு உருவாகும். இத்தகைய வயிறு தொடர்பான பிரச்சனை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
முட்டையுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்..! ஏன் தெரியுமா சாப்பிடக்கூடாது..!
இரத்தம் உறைதல்:
பலருக்கு மிக மெல்லிய இரத்தம் இருக்கும். இந்நிலையில் இரத்தத்தை அடர்த்தியாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் வைட்டமின் கே உள்ளது, இது இரத்தம் உறைவதற்கு உதவுகிறது.
வாயு பிரச்சனை:
சமையலுக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் காலிபிளவரில் நல்ல கார்போஹைட்ரேட் உள்ளது. அவை எளிதில் உடைந்து போகாது. எனவே அளவுக்கு அதிகமான காலிபிளவரை உட்கொண்டால் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தைராயிடு பிரச்சனை:
ஒருவருக்கு தைராயிடு பிரச்சனை இருந்தால், காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த காய்கறி உங்கள் உடலில் T3, T4 ஹார்மோன்களை அதிகரிக்கும். இது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கலாம்.
சிறுநீரக கல்:
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது பித்தப்பை அல்லது சிறுநீரக கல் பிரச்சனை தூண்டும்.
யூரிக் அமிலம்:
ஒரு நபரின் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், அவர் காலிபிளவர் உட்கொள்ளக்கூடாது, காலிபிளவரில் பியூரின் உள்ளது, இது யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
ஏன் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது தெரியுமா..?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |