Cause of Watery Eyes in Babies in Tamil
சந்தோசம்.. வருத்தம்.. க்ரோதம்.. ஆகிய மூன்று உணர்ச்சிகளுக்கும் கண்ணீர் தான் அடையாளம். பொதுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டுமின்றி கண்களை பாதுகாக்கவும் கண்ணீருக்கு மிக முக்கிய பங்குண்டு. கண்களில் கண்ணீர் மட்டும் இல்லை என்றால் நம்முடைய கண்கள் வறண்டு போய்விடும்.
குறிப்பாக கிருமிகளிடம் இருந்து நம் கண்களை பாதுகாப்பது நம் கண்களில் இருந்து வரும் கண்ணீர் தான். மேலும் நாம் அழுத்திடும் போது நம் கண்களில் சுரக்கும் கண்ணீர் கண்ணில் உள்ள தூசு மற்றும் மாசுக்கள் வெளியேற்றுகிறது. நமது கண்களில் கண்ணீர் சுரப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம் ஆகும். இருப்பினும் அது அளவுக்கு அதிகமாக சுரக்கிறது என்றால் கண்டிப்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் என்றால் பிறகு அது நம் கண்களுகே பெரிய அளவில் பிரச்சனையை கொண்டு வந்து சேர்த்துவிடும். சரி இன்றைய பதிவில் கண்ணில் நீர் வடிதல் காரணம் என்ன என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வில்வ இலையில் உள்ள நன்மைகள்
கண்ணில் நீர் வடிதல் காரணம்:
கண்களில் தண்ணீர் அதிகம் வடிய இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. அவற்றில் முதல் காரணம் கண்ணீர்ச் சுரப்பிகளில் (Lacrimal glands) அளவுக்கு அதிகமாகக் கண்ணீர் சுரப்பது.
இரண்டாவது காரணம் கண்ணில் சுரக்கும் நீரானது, நாம் ஒவ்வொருமுறை இமைகளை மூடித் திறக்கும் போது கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள நுண்ணிய குழாய் (Nasolacrimal duct) வழியாகத் தொண்டையில் இறங்கிவிடும். இந்த நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படும்போது கண்ணில் நிரம்பும் நீர் வெளியே வழியத் தொடங்கிவிடும்.
இந்த நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படுவது பெரும்பாலும் வயதானவர்களுக்கே ஏற்படும். நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால், கண்ணுக்குக் கீழே உள்ள ‘லாக்ரிமல் சாக்’ (lacrimal Sac) எனப்படும் பையில் கண்ணீர் தேங்கி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்த அடைப்பைச் சரிசெய்யலாம். இதனுடைய அறிகுறிகளாக கண்ணில் தொடர்ந்து நீர் வடிதல், மூக்கின் மேலே வீக்கம், வலி இது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இந்த பிரச்சனை பிறந்த குழந்தைகளுக்கும்கூட ஏற்படும். சில குழந்தைகளுக்கு பிறந்த பிறகே ‘நேசோலாக்ரிமல் டக்ட்’ எனப்படும் நுண்ணிய குழாய் முழு வளர்ச்சியடையும். குழந்தை பிறந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் கண்ணில் நீர் வடிந்தால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இதனை மசாஜ் செய்தே சரி செய்ய முடியும். அப்படியும் சரியாகவில்லை என்றால் அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூனைக்காலி விதையை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் தீமைகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |