Celery Juice Benefits in Tamil
நம்முடைய உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடியது என்றால் அது பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். அந்த வகையில் நாம் யாரும் பெரும்பாலும் பழங்களை சாப்பிடுவது இல்லை. அதுவே அத்தகைய பழத்தினை ஜூஸ் போல் செய்து கொடுத்தால் உடனே குடித்து விடுவோம். இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் நாம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை மற்றும் திராட்சை என இதுபோன்ற ஜூஸ் வகைகளை தான் விரும்பி குடிப்போம். ஆனால் இதில் காணப்படும் சத்துக்களை போலவே மற்றொரு ஜூஸிலும் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. இத்தகைய ஜூஸினை நாம் அவ்வளவாக குடித்து மற்றும் கேள்வி பட்டிருக்க மாட்டோம். ஆகவே இன்று செலரி ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா
செலரி ஜூஸில் உள்ள சத்துக்கள்:

- வைட்டமின் A
- வைட்டமின் C
- வைட்டமின் K
- மெக்னீசியம்
- கால்சியம்
- பொட்டாசியம்
- சோடியம்
- கார்போஹைட்ரேட்
- பாஸ்பரஸ்
- கலோரிகள்
- புரதம்
மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் 240 மில்லி செலரி ஜூஸில் காணப்படுகிறது.
செலரி ஜூஸ் நன்மைகள்:
உடலில் நீர் சத்து அதிகரிக்க:

பொதுவாக பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டிய நீரினை சரியான அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதனால் நீர் சத்து குறைவாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் நாம் செலரி ஜூஸினை குடிப்பதன் மூலம் நம்முடைய உடலுக்கு தேவையான நீர்சத்து அளித்து, கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் சிறுநீர் பிரச்சனை வராமலும் இருக்கச் செய்கிறது.
கொலஸ்ட்ரால் குறைய:

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த ஜூஸினை குடிப்பதன் மூலம் நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் அளவினை கட்டுக்குள் வைக்க முடியும். ஒருவேளை உங்களுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் காணப்பட்டால் இந்த ஜூஸினை குடிப்பதன் மூலம் தோராயமாக 7 Point வரை குறைக்க முடியும்.
உடல் வீக்கம் குறைய:

செலரி ஜூஸினை நாம் குடிப்பதன் மூலம் இதில் உள்ள சத்துக்கள் ஆனது நம்முடைய உடலில் காணப்படும் நீண்ட நாள் வலி மற்றும் வீக்கம் என இவற்றை சரி செய்ய உதவுகிறது.
| கருப்பு பேரீட்சைப்பழம் சாப்பிடுவதாக இருந்தால் இது தெரியாம சாப்பிடாதீங்க.. |
சருமத்தை பாதுகாக்க:
அதேபோல் இந்த ஜூஸினை நாம் குடிப்பதால் முகத்தில் காணப்படும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் என இவற்றை எல்லாம் நீக்கி சருமத்தை பளபளப்பாகவும், பாதுகாப்பாகவும் வைக்க உதவுகிறது.
மன அழுத்தம் குறைய:

செலரி ஜூஸ் எடுத்து கொள்வதன் மூலம் மனக் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்து ஞாயபாக சக்தியினை அதிகரிக்க செய்கிறது.
புற்றுநோயை தடுக்கலாம்:

இதில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது. மேலும் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
அஜீரண கோளாறு நீங்க:
இத்தகைய ஜூஸினை நாம் குடிப்பதன் மூலம் தினமும் சாப்பிடும் உணவு ஆனது விரைவில் செரிமானம் அடைந்து விடுகிறது. மேலும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடச் செய்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














