Cervical Cancer in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு உடலில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாமல் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் கொடிய நோயாக இருப்பது கேன்சர் தான். இந்த நோயானது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. இந்த கேன்சரில் பல விதங்கள் உள்ளது. அதனை பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்க மாட்டோம். இன்றைய பதிவில் சர்விகல் கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
Cervical Cancer Meaning in Tamil:
Cervical Cancer என்பது கருப்பை வாய் புற்றுநோய் என்றழைக்கப்டுகிறது.
கருப்பை புற்றுநோய் என்றால் என்ன.?
பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் (cervix) என்கிறோம். இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய்தான் கருப்பைவாய் புற்றுநோய் என கூறப்படுகிறது
யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்
Cervical Cancer Reasons:
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம், ஹ்யூமன் பாபிலோமாவைரஸ் (Human papillomavirus-HPV). உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது இந்த வைரஸ். 150-க்கும் மேற்பட்ட ஹெச்.பி.வி வைரஸ் வகைகள் இருப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதில், குறிப்பிட்ட இரண்டு வைரஸால் மட்டும் 70 சதவிகிதப் புற்றுநோய் ஏற்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.
புகை பிடித்தல்
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
3-க்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள்
மேல் கூறப்பட்டுள்ள காரணத்தால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
Cervical Cancer Treatment in Tamil:
முதலில் எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதை தெரிந்த்யு கொள்வதற்கு ஸ்கேன் எடுக்கப்படும்.
அடுத்து நோயின் நிலையை வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள்.
புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த பிறகு கண்ணிற்கு தெரியாத செல்களை அழிப்பதற்கும், இனிமேல் புற்றுநோய் செல்கள் வளராமல் இருப்பதற்கும் கீமோதெரபி சிகிச்சை செய்யப்படுகிறது.
cervical cancer symptoms in tamil:
ஆரம்பத்திலியே கருப்பை வாய் புற்றுநோய் பிரச்சனையை கண்டறிவது கொஞ்சம் கஷ்டமானது தான், கருப்பை வாய் புற்றுநோய் வளர்ச்சி அடையும் போது தான் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.
உடல் சோர்வாக இருப்பது
உடல் எடை குறைதல்
பசியின்மை
முதுகு வலி மற்றும் கால் வலி
மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல் அல்லது உடலுறவு போது இரத்தப்போக்கு ஏற்படுதல்
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |














