சின்னம்மை நோய்க்கான வீட்டு மருத்துவம்..!

Advertisement

Chickenpox Disease Treatment in Tamil

சின்னம்மை நோய்க்கான அறிகுறிகளையும் அதற்கான காரணங்களையும் முந்தைய பதிவில் விவரித்துள்ளோம். அதனை தொடர்ந்து இப்பதிவில் சின்னம்மை நோய்க்கான மருத்துவம் பற்றி பார்க்கலாம். அதாவது, சின்னம்மை நோய் ஏற்பட்டால் வீட்டில் இருந்தபடி என்ன வைத்தியங்களை செய்ய வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சின்னம்மை நோய் என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படும் நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் பல இடங்களில் கொப்புளங்கள், புண், அரிப்பு எரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளை எற்படுத்தும். ஆகையால், சின்னம்மை ஏற்பட்டதும் அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Home Remedies For Chickenpox in Tamil:

Home Remedies For Chickenpox in Tamil

மருத்துவம் -1

தேவையான பொருட்கள்:

  • வேப்பிலை – 1 கைப்பிடி 
  • துளசி – 1 கைப்பிடி 
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 

செய்முறை:

முதலில், வேப்பிலையின் காம்பை நீக்கிவிட்டு 1 கைப்பிடி அளவு எடுத்து கொளுங்கள். அடுத்து, துளசி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள். இவை இரண்டினையும், ஒரு உரலில் போட்டு மைய அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இதனுடன் 1/4 ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து மிகச்சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள். இதனை அம்மை போட்டவர்களுக்கு  சாப்பிட கொடுக்க வேண்டும்.

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள்

மருத்துவம் -2

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 1
  • விளக்கெண்ணெய் – 1 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். அதில், பூவம்பழம் என்று சொல்லக்கூடிய வாழைப்பழத்தினை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். இதனை நன்கு கலந்து சின்னம்மை உள்ளவர்களுக்கு மருந்தாக கொடுக்க வேண்டும்.

மருத்துவம் -3

  • சின்ன வெங்காயம் – 1
  • கோமியம் – சிறிதளவு 

செய்முறை:

சின்ன வெங்காயம் ஓன்று அல்லது இரண்டு எடுத்து கொள்ளுங்கள். அதனை மைய அரைத்து அல்லது இடித்து கோமியத்துடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கோமிய தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

மருத்துவம் -4

அம்மை போட்டவர்களுக்கு காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் மற்றும் இளநீர் போன்ற குளிர்ந்த உணவு பொருட்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சின்னம்மை எளிதில் நீங்கிவிடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement